search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivasakthi Vidyalaya School"

    • மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானுர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டது.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் வண்ண வண்ண உடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். பள்ளி ஆசிரியைகள் அனைவரும் மாணவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன். ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • 9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
    • 10-வது நாளான விஜயதசமி அன்று “அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா” நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த வருட நவராத்திரி விழா 15-ந் தேதி முதல் நேற்று வரை கொண்டாடப்பட்டது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு படிகளில் கொலுமேடை உருவாக்கப்பட்டது.

    நவராத்திரி பூஜையை மேலும் அழகாக்கும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸீ, சன் பிளவர் எனும் நான்கு அணி மாணவர்களும், இந்தியாவின் நான்கு திசைகளின் முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் பாரம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டு வகைகளை தனித்தனியே அவற்றின் தனித்தன்மை விளக்கும் விதமாக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். மார்னிங் குளோரி அணி மேற்கு இந்திய மாநிலங்களையும், சன் பிளவர் அணி தென்னிந்திய மாநிலங்களையும், லோட்டஸ் அணி வட இந்திய மாநிலங்களையும், ரைசிங் டைஸி அணி கிழக்கு இந்திய மாநிலங்களையும், மையமாக வைத்து அவற்றின் பாராம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் தோன்றிய விதம், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியதோடு அவற்றை அணி மாண வர்களே மாணவர்களுக்கும் கொலுவை காண வந்தவர்களுக்கும் விளக்கிக் காட்டினர்.

    மேலும் ஆசிரியைகளும், கொலுவினை தினமும் வித்தியாசமாகக் காட்டும் விதத்தில் அவற்றினை அலங்காரப்படுத்தியதும், அந்தந்த நாளுக்குரிய கோலங்கள், மலர்கள், பிரசாதங்களை அவர்களே தயார்செய்து வந்து அன்றாட பூஜையை அந்நாட்களுக்குரிய வண்ண உடை உடுத்தி, மாண வர்களோடு இணைந்து வழிபாடு செய்தனர்.

    9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.10-வது நாளான விஜயதசமி அன்று "அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா" நடைபெற்றது. அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உடன் வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்.

    • தேசிய அளவிலான திறானாய்வு தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    • சிறந்த முதல்வர் கேடயம் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் நித்யா தினகரனுக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழா விழாவிற்கு அரியப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.டி தினேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார்.

    மேலும் தேசிய அளவிலான திறானாய்வு தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற மாணவி அனோஷ்கா மற்றும் 5-ம் இடம் பெற்ற மாணவி இன்ஷிகா ஆகியோருக்கு தலா ரூ.1,200 ரூ.1,000 க்கான காசோலைகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்க ளையும் வழங்கப்பட்டது.

    கல்வி வளர்ச்சி நாளன்று பள்ளியின் சார்பில் நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

    மேலும் இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளியில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு இடையேயான பெகாசஸ் போட்டியில் சக்தி வித்யாலயா பள்ளி பங்கேற்று இக்னைட் மைன்ட்ஸ் போட்டியில் வெற்றிகண்டு 2-ம் பரிசு பெற்ற 9-ம் வகுப்பு மாணவிகள் தனிஷா மற்றும் சஜிதா விற்கும், அறிவியல் திறனாய்வு போட்டியில் 3-ம் பரிசு பெற்ற மாணவன் ஜெய் ஸ்ரீதருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினரால் கொடுக்கப்பட்டன.

    பாரத் பள்ளியின் சிறப்பு விருதான சிறந்த முதல்வர் கேடயம் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் நித்யா தினகரனுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் நடைபெற்ற முதலாம் கபடி சுற்றில் சிறப்பாக வெற்றி பெற்று தகுதியடைந்த மாணவ பிரிவினர் பின்னர் தென்மண்டல கபாடிபோட்டியிலும் பங்குப் பெற்று வெற்றியடைந்தனர். அவர்களுக்கான வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

    இடைகால் ஸ்டஅக் பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற கோகோ போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4-ம் இடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள்செய்திருந்தார்.

    • பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பாக உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    பேரணியை ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்க ராஜன் என்ற கோபி தொடங்கி வைத்து பேசும் போது, பிளாஸ்டிக்கை வீட்டிலேயே பிரித்து எடுப் பது எளிதானது. அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது. பிளாஸ்டிக் பொருட்களை முறையாக பிரித்து எடுத்து அப்புறப்படுத்துவதில் ஆவுடையானூர் ஊராட்சி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக மாணவி செல்வமாரி வரவேற்று பேசினார். மாணவி ஜெய்ஸ்ரீ, கமலஸ்ரீ ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பேசினர். பேரணியானது ஆவுடையானூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கி மாடியனூர் வழியாக சென்றது. பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்களை கூறியபடி மாணவர்கள் சென்றனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பேரணி ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். ஆசிரியை குயின் விக்டோரியா வரவேற்று பேசினார். ஆசிரியை தங்க ஜெயா சிறப்புரை வழங்கினார். இன்றைய குழந்தைகளுக்கு தேவையான நல்லொழுக்கம், தன்னடக்கம், சுயமரியாதை, கட்டுப்பாடு, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பள்ளியின் ஆசிரியர்கள் பாட்டு, கவிதை, நாடகம் மூலம் எடுத்துரைத்தனர்.

    மேலும் கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்ற கலாம் கல்வி நிறுவனம் நடத்திய கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் கையெழுத்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள், சதுரங்க பலகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் சிறப்பு பரிசுகள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது. ஆசிரியை அருணா தேவி நன்றி கூறினார்.

    ×