search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாவூர்சத்திரம் அருகே சிவசக்தி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா
    X

    விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை படத்தில் காணலாம்.


    பாவூர்சத்திரம் அருகே சிவசக்தி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா

    • சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். ஆசிரியை குயின் விக்டோரியா வரவேற்று பேசினார். ஆசிரியை தங்க ஜெயா சிறப்புரை வழங்கினார். இன்றைய குழந்தைகளுக்கு தேவையான நல்லொழுக்கம், தன்னடக்கம், சுயமரியாதை, கட்டுப்பாடு, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பள்ளியின் ஆசிரியர்கள் பாட்டு, கவிதை, நாடகம் மூலம் எடுத்துரைத்தனர்.

    மேலும் கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்ற கலாம் கல்வி நிறுவனம் நடத்திய கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் கையெழுத்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள், சதுரங்க பலகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் சிறப்பு பரிசுகள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது. ஆசிரியை அருணா தேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×