search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle damage"

    • வில்சன் சாலமன் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டணம் கிராமத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக இருந்து வருபவர் வில்சன் சாலமன் (வயது 58).

    கார் மோதி விபத்து

    இவர் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக பாவூர்சத்திரம் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    12 மோட்டார்கள் சேதம்

    இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேத மடைந்தன. வில்சன் சாலமன் ஒட்டி வந்த காரும் பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி வில்சன் சாலமன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து புதுப்பாளையம் நோக்கி மீராஷா (வயது 50) என்பவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கம்மியம்பேட்டை சாலைக்கு செல்வதற்காக டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மீராஷா தூக்கி வீசப்பட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியதால் டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தினார்‌. இதனை தொடர்ந்து காயம் அடைந்த மீராஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.

    ×