search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்"

    • நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார்.
    • நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் அதைப் பெற்றுக் கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறுவதற்காக தென்னிந்திய பொதுச்செயலாளர் பதவியில் உள்ள நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    "நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் . " நன்றிநண்பா " என்று நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது
    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் "எனக்கு பிடிக்கவே இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அண்மையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது. தமிழ்நாடு வசூலில் மட்டும் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டினர்.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை.. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது

    மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!" என அவர் பதிவிட்டுள்ளார்.

    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
    • படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

    இயக்குனர் மணிரத்னம் 36 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'தக் லைப்' என்ற புதிய ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல்

    ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது. 

    இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, மணிரத்னம் செர்பியாவில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

    இந்த படத்தில் நடிகர் கமல் தற்காப்பு கலை திறன்களை வெளிப்படுத்துகிறார். பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருக்கின்றன. மணிரத்னம்-கமல் லட்சிய படமான 'தக் லைப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    • இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்
    • 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தக் லைப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

    'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    இநநிலையில், கால்சீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளார்.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
    • இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் நாளை (பிப் -16) வெளியாகிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'எஸ்கே 21' என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

    'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    இந்நிலையில், 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவின் சைபீரியா பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் இதில் நடிகர் கமல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.
    • படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'கேஎச் 233' என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

    திரைக்கதை மற்றும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படம் கைவிடப்படுகிறது எனவும், தயாரிப்பாளர்களால் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் பகிரப்படவில்லை எனவும் தகவல் பரவி வந்தது.

     இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல் - வினோத் இணையும் #KH233கைவிடப்படவில்லை எனவும் வேறு ஒருநேரத்தில் இந்த படம் நிச்சயம் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது. திரைக்கதை மற்றும் 'கால்ஷீட்'பிரச்சினை காரணமாக இந்தபடம் கைவிடப்படுகிறது என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     

    • புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.
    • ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கருணாநிதியால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்றுமுன்திளம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

    இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

    புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!

    அவரது உதவியால்தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?.

    இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். #TheGOATMGR

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ரஜினியின் புதிய படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது.


    கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனை சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் "என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்" என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து ரஜினிகாந்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கமல்ஹாசனை கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.


    இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்களின் ஷுட்டிங் இதே இடத்தில் நடைபெற்ற போது இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' .
    • இந்த படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியானது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.


    தக் லைஃப் போஸ்டர்

    நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'தக் லைஃப்' (Thug Life) படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார்.
    • ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    நடிகர் கமல் திரையுலகில் நினைத்ததை சாதிக்க முடிந்தது. ஜெயிக்க முடிந்தது. அதேபோல் அரசியலிலும் சாதித்து விடலாம் என்று போட்ட கணக்கு கிட்டத்தட்ட தப்பு கணக்காகவே மாறி போனது. இப்போது சினிமாவையும் விட முடியாமல் அரசியலையும் கைவிட முடியாமல் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்.

    சினிமாவை எப்படி ஓ.டி.டி. தளத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அதே போல் அரசியலையும் ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ஜெயித்து பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ இப்போது அவர் எங்கிருந்தாலும் ஆன்லைன் வழியாக அரசியலையும் நடத்தி வருகிறார். தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் கலந்துரையாடுவது, ஆலோசனைகள் வழங்குவது என்று தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். தன்னால் நேரடியாக முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடியாததால் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அருணாச்சலம் என்ற நிர்வாகியை நியமித்து உள்ளார். இப்போது கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார். அதேநேரம் நடந்தது என்ன? அடுத்த திட்டம் என்ன? என்று எல்லா விசயங்களையும் கமலுக்கு அப்டேட் செய்து விடுகிறாராம்.

    களத்தில் இறங்கி நடந்தும் ஓடியும் கூட அரசியலில் சாதிக்க முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில் ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    ×