என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கமலின் ஆன்லைன் அரசியல்
- கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார்.
- ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.
நடிகர் கமல் திரையுலகில் நினைத்ததை சாதிக்க முடிந்தது. ஜெயிக்க முடிந்தது. அதேபோல் அரசியலிலும் சாதித்து விடலாம் என்று போட்ட கணக்கு கிட்டத்தட்ட தப்பு கணக்காகவே மாறி போனது. இப்போது சினிமாவையும் விட முடியாமல் அரசியலையும் கைவிட முடியாமல் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்.
சினிமாவை எப்படி ஓ.டி.டி. தளத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அதே போல் அரசியலையும் ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ஜெயித்து பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ இப்போது அவர் எங்கிருந்தாலும் ஆன்லைன் வழியாக அரசியலையும் நடத்தி வருகிறார். தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் கலந்துரையாடுவது, ஆலோசனைகள் வழங்குவது என்று தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். தன்னால் நேரடியாக முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடியாததால் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அருணாச்சலம் என்ற நிர்வாகியை நியமித்து உள்ளார். இப்போது கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார். அதேநேரம் நடந்தது என்ன? அடுத்த திட்டம் என்ன? என்று எல்லா விசயங்களையும் கமலுக்கு அப்டேட் செய்து விடுகிறாராம்.
களத்தில் இறங்கி நடந்தும் ஓடியும் கூட அரசியலில் சாதிக்க முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில் ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.






