கமல் - வினோத் இணையும் KH-233 படம் குறித்த புதிய தகவல்

இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கமல் - வினோத் இணையும்  KH-233 படம் குறித்த புதிய தகவல்
Published on

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'கேஎச் 233' என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

திரைக்கதை மற்றும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படம் கைவிடப்படுகிறது எனவும், தயாரிப்பாளர்களால் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் பகிரப்படவில்லை எனவும் தகவல் பரவி வந்தது.

 இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல் - வினோத் இணையும் #KH233கைவிடப்படவில்லை எனவும் வேறு ஒருநேரத்தில் இந்த படம் நிச்சயம் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது. திரைக்கதை மற்றும் 'கால்ஷீட்'பிரச்சினை காரணமாக இந்தபடம் கைவிடப்படுகிறது என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com