search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை"

    • 4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அப்பகுதியில் உள்ள எண்ணை நிறுவனங்களில் தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது.

    மீனவர்களின் 700-க்கும் மேற்பட்ட படகுகள், வலைகள் ஆகியவை எண்ணெய் கழிவுகளில் சிக்கி சேதமடைந்தன. இதன் காரணமாகவும் எண்ணை படலங்கள் தேங்கி நிற்பதாலும் அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடை பெற்று வருகிறது.

    தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கடல் பகுதி மற்றும் முகத்து வாரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.

    சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி பேரல்களில் அள்ளி வெளியேற்றி வருகிறார்கள்.

    எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு 'ஆயில் சக்கார்' எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 எந்திரங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களை படகுகளில் கட்டி எண்ணெய் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகளுக்கு இழுத்துச் சென்று பேரல் பேரலாக கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 15 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

    இதன்மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீரில் மிதந்த படியே கழிவுகளை சேகரித்து டிரம்களுக்கு அனுப்பும் 2 எந்திரங்கள் மூலமாக பணிகள் நடை பெற்று வருவதால் எண்ணெய் கழிவுகள் ஓரளவுக்கு வேகமாக அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் 17-ந்தேதிக்குள் (நாளை) எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதனால் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எண்ணெய் கழிவுகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை வர உள்ளது.

    அன்றைய தினம் இதுவரை அகற்றப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் எத்தனை டன்? என்பது பற்றிய முழு விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு மும்பை மற்றும் ஒடிசாவில் இருந்து நவீன எந்திரங்கள் இன்று வரவழைக்கப்பட இருப்பதாக மாசுகட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த எந்திரங்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்றும், இதன் மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.

    திருப்பதி:

    கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 4-ந் தேதி சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மிச்சாங் புயல் காரணமாக 4-ந் தேதி நடைபெற இருந்த சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விமானப்படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்தனர். விண்ணில் விமானத்தில் பறந்து தீப்பிழம்பை கக்கிய படியும், விமானங்கள் குறுக்கு நெடுக்காக சென்றும், வண்ணப் பொடிகளைத் தூவியும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.

    இதேபோல் கடற்படை வீரர்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர். 

    • நடைபாதைகளில் அலங்கார தரை கற்கள் பதிக்கப்படுகிறது
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த சீசன் தான் கன்னியாகு மரியில் மெயின் சீசன் ஆகும். இந்த சீசன் காலம் சபரிமலை சீசன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கன்னியா குமரிக்கு வந்து செல்வா ர்கள்.

    இந்த ஆண்டு சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதா ரம், குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம், கார் பார்க்கிங், சாலை வசதி உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கட ற்கரை பகுதியில் மணல் பரப்பே தெரியாத அளவில் நடைபாதைகளில் பல வண்ண அலங்கார தரை கற்கள் பதிக்கும்பணி தொ டங்கி நடைபெற்று வருகிறது.

    ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.

    • விசைப்படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் பழுது ஏற்பட்டது.
    • பழுதான படகை சரி செய்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

    என்.ஜி.ஒ.காலணி, நவ.8-

    குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    கூடங்குளம் பகுதியில் மீன் பிடிக்க இவர்கள் சென்று கொண்டிருந்தனர். விசைப்படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் படகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் பழுதான விசைப்படகு நடுக்கடலில் தத்தளித்தது. இது குறித்து சக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் கடலில் ஏற்பட்ட நீரோட்டத்தின் காரணமாக விசைப்படகு, சங்குத்துறை பீச்சில் கரை ஒதுங்கியது. தரையில் உள்ள மணல் தட்டியபடி விசைப்படகு கரை ஒதுங்கி நின்றது. இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் படகை விட்டு கீழே இறங்கி னார்கள். விசைப் படகு கரை ஒதுங்கியது குறித்து கடலோர போலீ சாருக்கும், சுசீந்திரம் போலீ சாருக்கும் தெரிய வந்தது.

    அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பழுதான விசைப்பலகை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடு பட்டு உள்ளனர். பழுதான படகை சரி செய்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

    • கடற்கரை களை கட்டியது
    • சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி :

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். ஆனால் மழை மேகம் காரணமாக சூரியன் உதயம் ஆகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் சிலைக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும்போதும், கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புதுகுப்பம் மீனவகிராமத்தில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து வந்தது.
    • மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புது குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போது இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து கடற்கரை பரப்பு கரைந்து வந்தது.

    இதனை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அப்பகுதி மீனவமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத்துறை சார்பாக ரூ. 9 கோடி மதிப்பில் புதுக்குப்பம் கிராம கடற்கரை பகுதியில் இருபுறமும் சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடமும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இதன் திறப்பு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ,எம்.பி. ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார்,பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    இதேபோன்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைக்கும் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான திட்ட வரைவுகளை தயார் செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • படகுபோக்குவரத்து 4 நாட்களுக்கு பின் காலை 8 மணிக்கு தொடங்கியது
    • ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரமும் குறைந்து விட்டன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடந்த 4 நாட்களாக காலை10 மணி வரை கடல் ஒருபுறம் சீற்றமாகவும் மறுபுறம் நீர்மட்டம் தாழ்வாகவும் காணப்பட்டது.இதனால் 4 நாட்களாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டு வந்தது.

    வழக்கமாக தொடங்கும் நேரமான காலை 8 மணிக்கு பதில் 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.இதற்கிடையில்கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறையின் காரண மாகவும்பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும் கன்னியாகுமரியி ல்ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.

    ஆனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயற்கை சீற்றம் கார ணமாக படகு போக்கு வரத்து காலதாமதமாக தொடங்கப்பட்டது.இதனால் காலை நேரத்தில் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தொடர்மழை பெய்த பிறகும் சுற்றுலாபயணிகளின் வருகை குறையவில்லை.கொட்டும் மழையிலும் குடைபிடித்துக்கொண்டு சுற்றுலா பயணிகள்சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதற்கிடையில் நேற்றுடன் தொடர்விடுமுறை முடிந்தது. மேலும் மழை இல்லாத மாவட்டங்களில் காலாண்டு தேர்வுமுடிந்து விடுமுறை விடப்பட்ட பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும்இன்று முதல் குறையதொடங்கிவிட்டது. மழையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவினாலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளும் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கிறது. ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரமும் குறைந்து விட்டன. லாட்ஜ்க ளில் உள்ள அறைகளும் காலியாக கிடக்கின்றன.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் கடலோர பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் 1071 கிலோ மீட்டர் தூர கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி இன்று நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் 6 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

    • தொல்லியல் துறையினர் வர இருந்ததால் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மர்ம மரப்பெட்டியை பார்ப்பதற்காக பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    திருப்பதி:

    விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அருகே மர்ம மரப்பெட்டி நேற்று கரை ஒதுங்கியது. அந்த பெட்டி 100 கிலோ எடைக்குமேல் இருந்தது .

    இதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். உள்ளூர் மீனவர்கள் பெரிய பெட்டியைக் கண்டுபிடித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மரப் பெட்டியை 2 மண் அள்ளும் எந்திரங்களின் உதவியுடன் மணலில் நகர்த்தப்பட்டது. காலையில் ஆய்வுக்காக தொல்லியல் துறையினர் வர இருந்ததால் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில், இந்த மர்ம மரப்பெட்டியை பார்ப்பதற்காக பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    மோப்ப நாய் மற்றும் துப்புக் குழுவினர் அந்த இடத்திற்கு வந்து பெட்டியை ஆய்வு செய்தனர், அது காலியாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

    இது பொதுவாக படகுகள் மற்றும் கப்பல்கள் மோதுவதைத் தடுக்க மரத்தால் செய்யப்பட்ட பெட்டி என்று உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.

    "எப்போதாவது, இந்த பெட்டிகள் படகுகள் மற்றும் கப்பல்களில் இருந்து தூக்கி வீசப்படலாம் என்று போலீசார் கூறினர். 

    • அரியமான் கடற்கரையில் தூய்மை பணியை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்றுகளை நட்டார்.
    • பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக கரு ணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை யொட்டி சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற் கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்று களை நட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி வீர பத்திரன், ராமேஸ்வரம் நக ராட்சி தலைவர் நாசர்கான், ராமநாத புரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் நட ராஜன், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் உட்பட சுற்றுலாத்துறை அலுவ லர்கள் மற்றும் கிராம பணி யாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியில் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அரியமான் கடற்கரையினை சுத்தம் செய்தனர். பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி தொடங்கியது
    • காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படு கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநிலசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப் பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில்சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    காலை8மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரை யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாது காப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு போக்குவரத்து நேற்று நடந்தது. நேற்று ஒரே நாளில் 50 உள்ள பயணிகள் மட்டுமே படையில் வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்தனர். இன்று காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.

    ×