search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை விதைகள்"

    • கடலோர கிராமங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சுனாமி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, காமேஷ்வரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களை பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    பிரதாபராமபுரம், விழுந்த மாவடி, காமேஸ்வரம், , நாகூர் பட்டினச்சேரி, வேட்டைக்காரன் இருப்பு, உள்ளிட்ட 24 மீனவர் கிராமங்களில் 7.1/2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டு இருப்பதாகவும் இப்பணியில் கல்லூரி மாணவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தன்னார்வு அமைப்பினர் ஈடுபட்டதா கவும் இதன் மூலம் வரும் காலங்களில் கடற்கரை ஓரம் இயற்கை பேரிடர் இருந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    குறிப்பாக பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள கடற்கரைப் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் 4 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் மட்டும் 5 லட்சம் பண விதைகள் நடப்பட்டு தற்போது நன்கு வளர்ந்திருப்பதாகவும், இதில் 90% மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து இருப்பதாகவும் அடுத்த கட்டமாக உள் கிராமங்களில் தமிழ்நாடு கிரீன் விஷன் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தார்.

    • அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பூ உலகை காப்போம் மன்றத்தின் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குளம் யூனியன் முன்னாள் துணை சேர்மன் தங்கசெல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பூ உலகை காப்போம் மன்றத்தின் அங்கத்தி னர்கள், அசுரா அமைபின் பொறுப்பாளர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வ லர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பூ உலகை காப்போம் மன்றத்தின் தலைவர் ராஜா வரவேற்று பேசினார். ஆலோசகர் இளங்கோ, அசுரா மன்றத்தின் ராஜா, பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டி னை செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
    • இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் ஏரியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் வரவேற்றார். அரிமா வட்டார தலைவர் ஜவஹர், டாக்டர் பொன்னம்பலம், பொருளாளர் கலைஞர்புகழ், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தேன்மொழி சண்முகம், ஊராட்சி செயலாளர் குமரேசன், தலைமையாசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் ரமேஸ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மக்கள் நலப் பணியாளர் தனபால், கிராம உதவியாளர் கணேசன் மற்றும் அம்மாசி ஆகியோர் கொண்ட குழுவினர் 2ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். முடிவில் பிரவீன் நன்றி கூறினார்.

    • வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.
    • பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அ. டயானா ஷர்மிளா தலைமையில், பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் எம். பொன்னுசாமி, கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலகர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    • பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • நிர்வாகிகள், உறுப்பினர்கள்‌ திரளாக கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் கடலோர பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் 1071 கிலோ மீட்டர் தூர கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி இன்று நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் 6 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • மருதம்புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆலங்குளம்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆலடி அருணா அறக்கட்டளை, பொழில் அறக்கட்டளை மற்றும் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளத்திமடம், புதுப்பட்டி, மருத்தம்புதூர் ஆகிய கிரா மங்களில் உள்ள குளங்களில் 2500 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக காளத்திமடம், புதுப்பட்டி, மருதம்புத்தூர் பகுதியில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோரை மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தி.மு.க. மகளிரணி அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா, புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம், மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, நிர்வாகி சுதாகர், ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் மற்றும் சிவசுப்பிரமணியன், பாலாஜி, வில்லிசை கலைஞர் பரமேஷ்வரி, அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மருதம் புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர் மாரி வண்ண முத்து. ஊராட்சி தலைவர் பூசத்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழகத்தில் 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது.
    • அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரியம், 'கிரீன் நீடா' சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் எனும் என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து, வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 14 கடலோர மாவட்டங்களில், ஒரு கோடி பனை விதைகளை நட உள்ளன.

    நாளை காலை 10.30 மணிக்கு, 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்வை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக, பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது:-

    தமிழகத்தில், 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது. இதனால், கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு என, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

    எனவே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில், 1,076 கி.மீ., பரப்பளவில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, வருகிற 1-ந் தேதி துவங்குகிறோம்.

    அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும். இப்பணியில், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ்., மாணவர்களும், கிரீன் நீடா போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
    • பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.

    இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.

    இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெசவாளர் காலனி பூங்காவில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
    • இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள நெசவாளர் காலனி பூங்காவில் விதைப்போம் வளர்ப்போம் குழு சார்பில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பசியில்லா சங்கரன்கோவில் அறக் கட்டளை நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். கோவில்பட்டி வட்டம் இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

    • 1,001 பனை விதைகளை நட்டனர்
    • பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி குரும்பர் குளக்கரைகளில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் 1,001 பனை விதைகள் நடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மரமும், மனிதனும் அமைப்பை சேர்ந்த, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு 1,001 பனை விதைகளை நட்டனர்.

    • சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
    • பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன் முன்னிலையில் வாழப்பாடி அரிமா சங்க பட்டய தலை வர் சந்திரசேகரன், வட்டார தலைவர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, பன்னீர்செல்வன், கலைஞர்புகழ், சிவ.எம்கோ, அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு, செயலர் இந்திரா காந்தி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தனர்.

    பனை விதைகளை நடவு செய்த தோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்து பனை மரத் தோப்பை உருவாக்குவதென, ஊராட்சி மன்ற தலைவர் பால சுப்பிரமணியம், செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் உறுதியேற்றனர். பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.

    ×