search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி ஏரியில் 100 பனை விதைகள் நடும் பணி
    X

    விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி ஏரியில் 100 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

    விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி ஏரியில் 100 பனை விதைகள் நடும் பணி

    • ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
    • உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்

    கடலூர்:

    பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.

    Next Story
    ×