என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில்  குளக்கரைகளில் நடப்பட்ட பனை விதைகள்
    X

    பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    கடையத்தில் குளக்கரைகளில் நடப்பட்ட பனை விதைகள்

    • குட்டிக்குளத்தின் கரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வயல்காட்டு பகுதிகளில் உள்ள குளக்கரைகளை பனைமரக்கரை களாக்கி வலிமையாக்கிடும் பணியில் குட்டிக்குளத்தின் மேற்கு மற்றும் தெற்கு கரைப்பகுதியில் நூற்றுக்க ணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.

    தென் பத்து குளத்திற்கும் குட்டிக்குளத்திற்கும் நடுவில் செல்லும் பாதையின் இருபகுதியிலும் பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்கள் ஜெப்வின், விஷ்ணு, செர்வின், அலோசியஸ், நாவினி, சிலம்ப கலைஞர் முத்தரசன் மற்றும் சுரண்டை காமராஜர் கல்லூரி வேதி யியல் பேராசிரியர் ராஜா சிங் ஆகியோர் பங்கேற் றனர். நிகழ்ச்சியை பனை யாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×