search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள்
    X

    தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள்

    • ஏரி, குளம், மற்றும் வாய்க்கால் கரை ஓரங்களில் மண் அரிப்பினை தடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பனை மரங்களை வளர்க்கலாம்.
    • மண்ணிற்கு உகந்த மரமாகவும் விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்பட உள்ளது.

    ஏரி, குளம், மற்றும் வாய்க்கால் கரை ஓரங்களில் மண் அரிப்பினை தடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பனை மரங்களை வளர்க்கலாம். பனை மரம் மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்கு உகந்த மரமாகவும் விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

    எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், பனை விதைகள் 30 ஆயிரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சமாக 50 விதைகள் மற்றும் பொது இடங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மூலம் பனை மரம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள் 100 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×