search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swine flu"

    காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதமாக மர்ம காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் நோயின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. எதனால் காய்ச்சல் வந்தது நோய்க்கான பெயர் என்ன அதற்கான சிகிச்சை முறை என்ன என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து கேட்டபோது மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு இதற்கு காரணம் இது பற்றி வேறு எதுவும் கருத்து கூற இயலாது என டாக்டர்கள் கூறுகிறார்களாம்.

    இதனால் இதற்கு பெயர் மர்ம காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்காய்ச்சல் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தற்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவும் சங்கராபுரம் ஊராட்சி பகுதியிலேயே பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.

    தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் இதற்கான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளியிடமோ அவர்களின் குடும்பத்தாரிடமோ டாக்டர்கள் காய்ச்சல் குறித்து எதுவும் கூற மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டால் இதற்கு மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு என்று டாக்டர்கள் கூறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கிற போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் வாய்மொழி உத்தரவு உள்ளது என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வந்த நோய் என்ன சிகிச்சை முறை என்ன என்பது குறித்து மருத்துவர்கள் யாரும் கூறுவதில்லை. இது மருத்துவ உலக தர்மத்திற்கு எதிரானது என மருத்துவர்களே கூறுகின்றனர்.

    இது குறித்து தி.மு.க. கட்சி சார்பில் தொழிற்சங்க நிர்வாகி மலையரசன் கூறியதாவது:- நோயாளியிடமோ அவர்களது குடும்பத்தினரிடமோ நோயின் தன்மையை அதற்கான சிகிக்சை முறையை கூற மறுப்பது மனித உரிமை மீறல். இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். சுகாதாரத்துறையின் வாய்மொழி உத்தரவு உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மக்களிடம் நற்பெயர் பெற்று உள்ள மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபடுவது சரியான செயலாகும். இதனை விடுத்து சுகாதாரத் துறை மனித உரிமை மீறலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தேனி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு டீக்கடைக்காரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் மாதவன் (வயது52). டீக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்படவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    சேலத்தில் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகினர். சுகாதார குழுவினர் இப்பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu
    சேலம்:

    சேலம் குகை சிவனார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம்மாள் (வயது39). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எந்த முன்னேறமும் இல்லாததால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    சேலம் அன்னதானப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகனார் (வயது 75). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10 நாட்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சுகாதார குழுவினர் அந்த பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SwineFlu

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    டாக்டர்கள் கந்தசாமியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கந்தசாமியை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 23 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu

    சேலத்தில் பன்றிகாய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஷ்வரி (வயது 39). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பின்பும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் நேற்று முன்தினம் புவனேஷ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

    அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்றி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புவனேஷ்வரிக்கு பன்றி காய்ச்சல் குணமடைய ஊசி மருந்துகள் செலுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    திருச்சியில் பன்றிகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #swineflu
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி கீழஅன்பில் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 நாட்களாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். சரவணன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

    திருச்சி மாவட்டத்தில் டெங்கு , பன்றிகாய்ச்சல் பரவி வந்த நிலையில், சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பரவாமல் தடுத்தனர். 

    இந்தநிலையில் மீண்டும் காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #swineflu
    கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது. #Dengue #Swineflu
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்ப சாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார்.

    இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Dengue #Swineflu

    கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(வயது 45). தொழிலாளி. பன்றிக்காயச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார். திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்தபரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.

    இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலியானார். #Swineflu
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தங்கம் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அன்னபூரணி (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை டாக்டர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியை பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அன்னபூரணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 28 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 65 பேர் என மொத்தம் 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி நிர்வாகி ஒருவர் இன்று பலியானார். #swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகளவில் இருக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை சுமார் 17 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனால் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு யூனியன் பகுதியிலும் 3 வாகனத்தில் டாக்டர்கள் அடங்கிய குழு வினர்களும், மற்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வார்டில் தற்போது 20 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று பலியானார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ஆலங்குளம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்தவர் வேலவன் (வயது45). இவர் கோவிலூற்று அருகே உள்ள பூலாங்குளத்தில் நடுநிலைப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ரத்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து வேலவன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேலவன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து மருத்துவகுழுவினர் அவரது குடும்பத்தினர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #swineflu
    பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    மதுரை:

    ராமாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தீனுல்லா (வயது 68). இவருக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்த நிலையில் தீனுல்லாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தீனுல்லா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீனுல்லா பரிதாபமாக இறந்தார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 49 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவண மூர்த்தி. இவரது மனைவி நாகமணி(வயது 47).

    இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காயச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனை நடந்தது.

    இதில் நாகமணிக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். நாகமணியோடு சேர்த்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu

    ×