search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Madurai government hospital"

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த 5 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். #AMMK #TTVDhinakaran #MaduraiGovernmenthospital
  சென்னை:

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் நோயாளிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்தூர் ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் பழனியம்மாள், உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகிய 5 பேரும் மின்தடையால் செயற்கை சுவாச கருவி(வென்டிலேட்டர்) இயங்காமல் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

  சுகாதாரத் துறையின் அலட்சியமான செயல்பாட்டால் அப்பாவி நோயாளிகள் 5 பேரின் உயிர் பறிபோய் இருப்பது கண்டனத்திற்குரியது. பழனிசாமி அரசின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இந்த மக்கள் விரோதிகளின் மோசமான அரசாட்சியில் நோயாளிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

  இச்சம்பவத்தை வழக்கம் போல மூடி மறைக்க முயலாமல், முறையான விசாரணை நடத்தி, தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடக்காமல் இருப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நோயாளிகள் பலியாவதற்கு காரணமானவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AMMK #TTVDhinakaran #MaduraiGovernmenthospital
  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் இறந்த விவகாரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourtMaduraiBench
  மதுரை:

  மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த குருசங்கர், இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு முன்பு ஆஜராகி முறையீடு செய்தார்.

  மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது.

  இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 பேர் இறந்தனர். உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.

  தென் தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை மிக முக்கியமான மருத்துவமனையாகும். இங்கு இதுபோன்ற கவனக்குறைவு ஏற்கத்தக்கதல்ல. இதற்கு யார் காரணம்? என்பதை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எனவே இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதிவாளரிடம் முறையாக அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர். #MaduraiGovernmenthospital #HighCourtMaduraiBench
   
  பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். #MaduraiGovernmenthospital
  மதுரை:

  மதுரையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் வினியோகம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

  மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியிலும் மின்சாரம் தடைப்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அதுவும் திடீர் பழுது அடைந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இதற்கிடையே தலைக்காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் மின்தடையால் செயல் இழந்தது.

  ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்த மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (வயது 55), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

  இது குறித்து தெரியவந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த அவர்களது உறவினர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.  ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறுகையில், “3 பேரும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். #MaduraiGovernmenthospital
  எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் சீராக உள்ளதாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல் தெரிவித்துள்ளார். #MaduraiGovernmentHospital #pregnantwoman #hivblood

  மதுரை:

  சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவர் வழக்கமான பரிசோதனைக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று வந்தார்.

  அப்போது அவருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே சிவகாசி அரசு ஆஸ்பத் திரியில் இருந்து ரத்தம் கொண்டு வந்து செலுத்தினர்.

  அதன் பின்னர் கர்ப்பிணியின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  கமுதி வாலிபர் வழங்கிய ரத்தத்தை செலுத்தியதில் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.

  எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தனி வார்டில் 9 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  கர்ப்பிணியின் உடல் நிலை குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

  எச்.ஐ.வி. பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 9 டாக்டர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கிறது.

  நோய் தடுப்பு மருந்துடன் சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. மேலும் கருவில் இருக்கும் சிசு பாதிக்கப்படாமல் இருக்க மருந்து வழங்கப்படுகிறது.

  தொடர் சிகிச்சையின் காரணமாக கர்ப்பிணியின் உடல் நலம் சீராக உள்ளது. தொடர்ந்து அவரது உடல் நிலையை கவனித்து வருகிறோம்.

  மேற்கண்டவாறு அவர் கூறினார். #MaduraiGovernmentHospital #pregnantwoman #hivblood

  பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
  மதுரை:

  ராமாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தீனுல்லா (வயது 68). இவருக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

  இந்த நிலையில் தீனுல்லாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

  இதையடுத்து தீனுல்லா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

  இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீனுல்லா பரிதாபமாக இறந்தார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 49 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு வாலிபர் பலியானார். பன்றி காய்ச்சல் பாதிப்புடன் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu
  மதுரை:

  மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்தவர் அருண் (வயது32). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.

  எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அருண் பரிதாபமாக இறந்தார்.

  பன்றி காய்ச்சல் பாதிப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 24 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu

  மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. #DenguFever #Swineflu
  மதுரை:

  மதுரை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

  பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்களின் கண்காணிப்பில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

  மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 49). கட்டிட தொழிலாளி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாண்டியராஜன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

  அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

  விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பேட்டைத்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி முத்துசெல்வி (32). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முத்துசெல்வி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள 10 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதே போல் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 120 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். #DenguFever #Swineflu
  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலியானார். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
  மதுரை:

  மதுரை மற்றும் சுற்றப்புற மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

  சிவகங்கை மாவட்டம், அரியக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா (வயது 50). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். காய்ச்சல் குணமாகவில்லை.

  இந்த நிலையில் சித்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 128 பேர் வைரஸ் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொது காய்ச்சல் வார்டு பிரிவில் உள்நோயாளியாக இருப்பவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.

  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு இன்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu #Dengue

  மதுரை:

  மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை மேற் கொண்டாலும் காய்ச்சலின் தீவிரம் அதிகமாகி வருகிறது.

  ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  மதுரை பைக்கராவை சேர்ந்த காசிமாயன் மனைவி மீனாட்சி (வயது 49) மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (75), மதுரை அழகர் கோவிலை அடுத்த அழகா புரியை சேர்ந்த சாமி ராஜ் (52),

  திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பொன்னம்மாள் (19) ஆகிய 4 பேர் பன்றி காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பலனின்றி இறந்தனர்.

  இந்த நிலையில் மேலும் 2 பேர் இன்று அதிகாலை இறந்தனர்.

  மதுரை, மேலூர் ஆத்தங்குளத்தை சேர்ந்த சங்கர். இவரது மனைவி அல்லிமலர் (35) மர்ம காய்ச்சலுக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அள்ளிமலர் இன்று அதிகாலை இறந்தார்.

  மதுரை சுந்தர்ராஜன் பட்டியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலம் 12 பேர் பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Dengue