என் மலர்
செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
மதுரை:
மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை மேற் கொண்டாலும் காய்ச்சலின் தீவிரம் அதிகமாகி வருகிறது.
ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை பைக்கராவை சேர்ந்த காசிமாயன் மனைவி மீனாட்சி (வயது 49) மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (75), மதுரை அழகர் கோவிலை அடுத்த அழகா புரியை சேர்ந்த சாமி ராஜ் (52),
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பொன்னம்மாள் (19) ஆகிய 4 பேர் பன்றி காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த நிலையில் மேலும் 2 பேர் இன்று அதிகாலை இறந்தனர்.
மதுரை, மேலூர் ஆத்தங்குளத்தை சேர்ந்த சங்கர். இவரது மனைவி அல்லிமலர் (35) மர்ம காய்ச்சலுக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அள்ளிமலர் இன்று அதிகாலை இறந்தார்.
மதுரை சுந்தர்ராஜன் பட்டியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலம் 12 பேர் பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Dengue






