search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition filed"

    • பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.
    • 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பானுமதி. இவர் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள் 921, பெண் வாக்காளர்கள் 931 பேர் என 1852 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க தரப்பில் பானுமதி மற்றும் உமா ஆகிய இருவரும், தி.மு.க தரப்பில் சுசீலா மற்றும் நீலாவதி ஆகிய இருவர் என 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    இந்த தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலராக கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, தேர்தல் பணி மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலாளர் பிரவீன் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை 30ஆம் தேதி திரும்ப பெறலாம். அதனைத் தொடர்ந்து போட்டி இருப்பின் இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் இறந்த விவகாரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourtMaduraiBench
    மதுரை:

    மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த குருசங்கர், இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு முன்பு ஆஜராகி முறையீடு செய்தார்.

    மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது.

    இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 பேர் இறந்தனர். உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.

    தென் தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை மிக முக்கியமான மருத்துவமனையாகும். இங்கு இதுபோன்ற கவனக்குறைவு ஏற்கத்தக்கதல்ல. இதற்கு யார் காரணம்? என்பதை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எனவே இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதிவாளரிடம் முறையாக அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர். #MaduraiGovernmenthospital #HighCourtMaduraiBench
     
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. #Mullaperiyardam #SC
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தமிழகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடை இல்லை என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 9-ந்தேதி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மூல வழக்கில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரளா அரசு அங்கு கட்டுமான பணிகளை தொடங்கி இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த நவம்பர் 26-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று புதிதாக கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், முல்லை பெரியாறு அணை பகுதியில் ஏற்கனவே உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அங்கு தரையை சமப்படுத்த கொட்டப்பட்ட மண்ணை அகற்ற உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Mullaperiyardam #SC

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #TiruvarurBypoll #HighCourt
    மதுரை:

    திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணனும், அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

    இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதற்கான ஒப்புதல் பெறவேண்டும்.  இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்த விதம் சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.  #TiruvarurBypoll #HighCourt
    ×