search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவண மூர்த்தி. இவரது மனைவி நாகமணி(வயது 47).

    இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காயச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனை நடந்தது.

    இதில் நாகமணிக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். நாகமணியோடு சேர்த்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu

    Next Story
    ×