என் மலர்
நீங்கள் தேடியது "young girl death"
- கார்த்திகா பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.
- முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் நடுத்தெருவை சார்ந்தவர் உய்க்காட்டான். இவரது மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வேல்முருகன், மகள் கார்த்திகா (25).
ஊய்க்காட்டான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணியின் போது இறந்ததால் அவரது மகன் வேல்முருகன் வாரிசு அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திகா பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் பள்ளி குழந்தை களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். அவருக்கு வேல்முருகன் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்ற நிலையில், அவரது தாய் முருகம்மாளும் அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கார்த்திகா தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் உடனடியாக நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கார்த்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதா கோட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி மீனா (வயது 39). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மண்எண்ணை கொட்டி மீனாவின் சேலையில் தீப்பிடித்தது. இதனால் அவர் காப்பாத்துங்க... காப்பாத்துங்க என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து உடல் கருகிய நிலையில் இருந்த மீனாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்.
இவர் புதுவை- கடலூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அல்போன்சா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அல்போன்சா வழக்கம் போல் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் வாழைப்பழம் மற்றும் ரொட்டி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அல்போன்சா திடீரென மயங்கி விழுந்தார்
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அல்போன் சாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அல்போன்சா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மீனாட்சி அம்மாள் (வயது 69). இவரது மகள் இசக்கியம்மாள். முன்னீர்பள்ளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இசக்கியம்மாள் தனது தாய் மீனாட்சி அம்மாளின் செல்போனுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் நேரில் வந்து பார்த்த போது மீனாட்சி அம்மாள் வீட்டு பாத்ரூமில் எர்த் வயரை தொட்டப்படி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அப்படி எந்த பெண்ணின் உடலும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி மாரியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் பெண்ணின் உடலை கண்ட பொதுமக்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண்ணின் உடல் ஆற்றில் மிதந்ததை கண்டனர். அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி உள்ளது. காலில் கொலுசு அணிந்திருந்தார்.
எனவே அந்த பெண் திருமணமானவர் என்றும் சமீபத்தில் தான் திருமணம் நடந்திருக்க கூடும் எனவும் தெரிகிறது. ஆனால் உடல் தண்ணீரில் மூழ்கி உப்பி போய் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.
அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி பலியானாரா? அந்த பெண்ணை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பறாசாலை அடுத்துள்ள கொளத்தூரில் உள்ளது தும்புக்கல் லட்சம் வீடு காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 32). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தார்.
தனது சொந்த உழைப்பு மற்றும் கடன் வாங்கி அதே பகுதியில் புதுவீடு கட்டினார். புதுமனை புகு விழா அடுத்த வாரம் நடத்த இருந்தது. பல்வேறு வேலைக்கு செல்லும் அனிதா டாக்டர், வக்கீல்கள் வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று மொபட்டில் கரமனா என்ற பகுதியில் உள்ள டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டார். அங்குள்ள பாலத்தில் சென்றபோது முன்னாள் திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றிய லாரி சென்றது.
திடீரென லாரியின் தார்பாயில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்தது. அவிழ்ந்த கயிறு அனிதா ஓட்டி வந்த மொபட்டின் கிக்கரில் சிக்கியது. அதிர்ச்சியடைந்த அனிதா சத்தம்போட்டார். அதற்குள் கயிறு இறுக்கி அங்குள்ள தடுப்பு சுவரில் மொபட் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்தவெள்ளத்தில் விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லாரியை நிறுத்தி அனிதாவை மீட்டனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பலியான அனிதாவுக்கு அங்கீதா, சமியா என்ற மகள்களும், அனுப் என்ற மகனும் உள்ளனர்.
கணவரை பிரிந்தாலும் உழைத்து கவுரவமாக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் 3 குழந்தைகளை படிக்க வைத்து புதுவீடு கட்டி வந்தார். அனிதாவின் இந்த திடீர் மரணம் துரதிஷ்டவசமானது என்று அந்த பகுதிமக்கள் கூறினர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த டிரைவர் சக்ரவர்த்தியை கைது செய்து அவர் மீது மனப்பூர்வ மற்ற கொலை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஷ்வரி (வயது 39). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பின்பும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் நேற்று முன்தினம் புவனேஷ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்றி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புவனேஷ்வரிக்கு பன்றி காய்ச்சல் குணமடைய ஊசி மருந்துகள் செலுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
குள்ளனம்பட்டி:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது.
பழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சி என்பவர் பன்றிகாய்ச்சலால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அழகாபுரியை சேர்ந்த குமசேரன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் அருகே மருனூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுல்தான்பேகம் (வயது27). காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ரத்த மாதிரி பரிசோதனையில் பன்றிகாய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுல்தான் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். #swineflu
வந்தவாசி:
சென்னை மணலியை சேர்ந்தவர் மதுசூதனன் மகள் மோனிஷா (வயது 20). இவரும் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தை சேர்ந்த எழிலரசன் (வயது 25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சாலவேடு கிராமத்திலேயே 2பேரும் வசித்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோனிஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தார்.
சமீபத்தில் கணவன் வீட்டிற்கு வந்த மோனிஷாக்கு மீண்டும் உடல்நிலை பாதித்தது. நேற்று வீட்டிலிருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.
மோனிஷாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மோனிஷாவின் உடலை மீட்டு கணவர் எழிலரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்த ராமசாமி மகள் முத்துமணி. மனநலம் பாதிக்கப்பட்டவர். தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு முத்துமணி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மயிலாடும்பாறை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் கோம்பைத் தொழு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் முத்துமணி பிணமாக மிதந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்துமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews