search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "poison drinking"

  ராஜபாளையம் அருகே கோவில் நிர்வாகிகளை கண்டித்து, முன்னாள் நிர்வாகி கோவிலுக்குள் நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமு (வயது 54), இவர் இந்த கிராம ஒரு சமுதாயத்தின் நிர்வாகியாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தார். இவர் மீது கிராம மக்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்டுராக்கன், பாரி, வில்லியாழ்வார் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து வருகிற 21-ந் தேதி கோவில் பொங்கல் விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

  இந்த நிலையில் முத்து ராமு கோவிலுக்குள் நுழைந்து உள்ளே பூட்டிக் கொண்டு சேலையால் தூக்கு போடவும், வி‌ஷ மருந்து பாட்டிலை கையில் வைத்தும் நிர்வாகிகளை மாற்றவும், ஓட்டுப் போட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யவும், நிர்வாகிகள் கோவில் திருவிழாவை நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.

  தகவல் அறிந்து ராஜபாளையம் தெற்கு இன்ஸ் பெக்டர் சங்கர்கண்ணன், தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுக்கும் வரை வெளியே வர மாட்டேன் என்று கூறி விட்டதால் வேறு வழியின்றி கோவிலின் பின்பக்க தகரக்கதவை கடப்பாரைக் கம்பியால் உடைத்தனர். உள்ளே நுழைந்து அவரை மீட்டனர். அதற்குள் முத்துராமு கையில் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்து, வாந்தி எடுத்தார்.

  இதனால் அவரை அவசரமாக அங்கிருந்த வாகனத்தில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு போலீசார் முத்துராமு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  கடையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தபால் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
  கடையம்:

  கீழக்கடையத்தை சேர்ந்தவர் ஆதி(வயது55). இவர் அப்பகுதி தபால் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வள்ளி. கடந்த 10 வருடமாக ஆதி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் குடும்பத்தோடு வசித்து வந்தார். 

  இதனிடையே வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆதி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 
  போச்சம்பள்ளி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  போச்சம்பள்ளி:

  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சுண்டக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). விவசாயியான இவர் தோட்டத்தில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பழகன் நேற்று மதியம் தனது விவசாயதோட்டத்தில் பூச்சிமருந்தை குடித்து  மயங்கி கிடந்தார்.  

  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனேஅவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்ற அன்பழகன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த அன்பழகனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளார்.
  திருவாரூர் அருகே கையாடல் செய்த பணத்தை கட்ட முடியாததால் வங்கி கேசியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் வைப்பூரை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (வயது 56). இவர் சோளங்கநல்லூரில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வங்கி பணம் ரூ.2½ லட்சத்தை கையாடல் செய்ததாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 19-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி வழங்கிவிட வேண்டும் என்று அதிகாரிகள் கெடு விதித்திருந்தனர். ஆனால் அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டார். 

  அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். 

  இதுபற்றி அய்யா பிள்ளையின் மகன் தமிழன்பன் வைப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  பாகூர் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  பாகூர்:

  பாகூர் அருகே குருவிநத்தம் மேலண்ட வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 51). சுமை தூக்கும் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர், சமீப காலமாக சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவரது மனைவி ஜெயசித்ரா தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். 

  இந்த நிலையில் நேற்று காலை ராமலிங்கம் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவரை கண்டித்து விட்டு ஜெயசித்ரா வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது அங்கு கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

  கணவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்ததும் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ஈரோட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

  ஈரோடு:

  ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிபவர் பூமலை (வயது 31). மனைவி பெயர் கலைச் செல்வி (26).

  பூந்துறை ரோடு ஸ்ரீநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஒரு பெண் குழந்தை உள்ளது.

  போலீஸ்காரர் பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

  இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தனியாக வீட்டில் இருந்த போலீஸ்காரர் பூமலையின் மனைவி கலைச்செல்வி திடீரென வி‌ஷத்தை குடித்தார். அப்போது அங்கு வந்த பூமலையும் மனைவி வி‌ஷம் குடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

  கணவன்-மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் பூமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  கபிஸ்தலம் அருகே கல்லூரிக்கு சென்ற மகள் மாயமானதால் மனமுடைந்த தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  கபிஸ்தலம்:

  தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி தெற்குத் தெருவில் வசிப்பவர் செல்வமணி (வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் தேவிகா (18). கும்பகோணம் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

  இந்த நிலையில் இவர் கடந்த 4-ந் தேதி கல்லூரிக்கு சென்ற தேவிகா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது தந்தை செல்வமணி உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளை தேடி பார்த்தார். ஆனால் தேவிகாவை காணாததால் செல்வமணி மனமுடைந்தார்.

  இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த வி‌ஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு செல்வமணி மயங்கி விட்டார். மயங்கிய நிலையில் இருந்த செல்வமணியை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வமணி பலனின்றி பரிதாபமாக இறந்தார் .

  இது குறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஏரியூர் அருகே விஷம் குடித்த மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  தர்மபுரி

  தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்துள்ள நாகமரை இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வல்லரசு (வயது 21). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

  இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி வல்லரசு இரவு வீட்டிற்கு வந்து உடல்நிலை சரியில்லை என்று கூறிய அவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் வல்லரசின் குடும்பத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வல்லரசை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்தனர்.

  இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் வல்லரசு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  விழுப்புரத்தில் குடும்ப தகராறில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  விழுப்புரம்:

  கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் தலைமை ஏட்டாக பணியாற்றி வந்தார்.

  இவரது மனைவி பத்மா. இவரும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் வேல்முருகனுக்கும், பத்மாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் வேல்முருகன் மனவேதனை அடைந்தார்.

  நேற்று இரவு வீட்டில் இருந்த வேல்முருகன் திடீரென்று வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணிக்கு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  தருமபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த நெருப்பூர் அருகே உள்ள குறுகாவியனூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுமதி (வயது 42). 

  இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

  இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுமதி குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.