புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே தொழிலாளி மரத்தில் ஏறியபோது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுக்கடை:

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த தொழிலாளி அருள் (வயது 57), இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத்தில் ஏறியபோது கீழே விழுந்து கால் முறிந்தது. 

அதன்பிறகு அவர் மனம் உடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அருள் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com