தட்டார்மடம் அருகே மைக்செட் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

தட்டார்மடம் அருகே மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மைக்செட் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து (வயது 57). மைக்செட் உரிமையாளரான இவர், இறைச்சி கடையும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி அமலராணி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

அந்தோணி சவரிமுத்துவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த அந்தோணி சவரிமுத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com