தற்கொலை
தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே காதல் மனைவியை பெற்றோர் அழைத்து சென்றதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஆகாஷ்(வயது19). இவர் கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு எஸ்.ஒகையூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி அந்த பெண்ணை, அவரது பெற்றோர் அழைத்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த ஆகாஷ் நேற்று காலை விஷத்தை குடித்தார்.

இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com