என் மலர்
செய்திகள்

நெல்லித்தோப்பில் இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்

புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்.
இவர் புதுவை- கடலூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அல்போன்சா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அல்போன்சா வழக்கம் போல் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் வாழைப்பழம் மற்றும் ரொட்டி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அல்போன்சா திடீரென மயங்கி விழுந்தார்
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அல்போன் சாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அல்போன்சா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.