என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்
ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்த ராமசாமி மகள் முத்துமணி. மனநலம் பாதிக்கப்பட்டவர். தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு முத்துமணி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மயிலாடும்பாறை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் கோம்பைத் தொழு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் முத்துமணி பிணமாக மிதந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்துமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story