search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student"

    • ராஜகோபால் அதிகாலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.
    • அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத் தெருவை சேர்ந்தவர் ராஜ கோபால். இவரது மகள் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்ப தாக கூறியுள்ளார். இதை யடுத்து ராஜகோபால் அதி காலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.

    அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடி யும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் இது குறித்து மூன்ற டைப்பு போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நயினார் மண்டபம் சுதானா நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அரியாங்குப்பத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி முதலியார் பேட்டை அன்னை சிவகாமி மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அந்த மாணவி வீடு திரும்ப வில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் அந்த மாணவி இல்லை.

    இதையடுத்து மாயமான மாணவியின் தந்தை முதலி யார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குவிடுமுறையில் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
    • ஓவியங்களை ரசித்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்

    புதுக்கோட்டை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன வாசல் சுற்றுலா தளத்தில் அதிகளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள சிற்பங்கள், ஓவியங்களை மாணவர்கள் ரசித்து பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். 

    • அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமாறன் தான் பழகி வந்த பெண்ணின் மூத்த மகளான கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். இதனை மாணவி கண்டித்து தனது தாயிடம் முறையிட்டார்.

    இந்நிலையில் மணிமாறன் 2-வது முறையாக அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வருகிறார்கள்.

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.
    • வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் அருண் (வயது 22). இவர் கடந்த 6 வருடங்களாக மதுராந்தகத்தில் உள்ள மோட்டார் காயில் கட்டும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் மதுராந்தகம் அருகே உள்ள புது மாம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் அருணும், 17 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்த தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

    இதனால் அருண், மாணவி இருவரும் மனம் உடைந்தனர். அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து அவர்களின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது குத்புதீன் மகன் முகமது வசிப் (வயது 14).

    இவர் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது முகமதுவசிப்பை ஏதோ விஷப்பூச்சி கடித்து அலறி உள்ளார்.

    உடன் முகமதுவசிப் பெற்றோர் அவர் தூங்கி இடத்தை சுற்றி பார்த்துள்ளனர்.

    எதுவும் கண்ணில் படாததால் திரும்ப தூங்க சொல்லி உள்ளனர்.காலை முகமதுவசிப் சோர்வாகவும்,மயங்கி விழுந்துள்ளார்.

    உடன் முகமதுவசிப் அவரது பெற்றோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகமதுவசிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
    • ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி செம்மலர்.

    இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.

    இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.

    அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.

    மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.

    மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.

    தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.

    இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நேற்று விடுமுறை என்பதால் முகமது உமர் தனது நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றுள்ளான்.
    • சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது42). இவரது மகன் முகமது உமர் (12). ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஆற்றில் மூழ்கி பலி

    நேற்று விடுமுறை என்பதால் முகமது உமர் தனது நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றுள்ளான். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த டாக்டர்கள் முகமது உமர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ஆத்தூர் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கேடஸ்வரா மெட்ரிக் பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களை சந்தித்து இறையன்பு பாராட்டினார்

    புதுக்கோட்டை,  

    தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இறையன்பு, தனது பதவி காலத்தின் போது, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதன்படி தமிழ்நாட்டில் முதன் முதலாக புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாசிப்போர் மன்றத்தின் 8வது கூட்டத்தில் இறை யன்பு எழுதிய பல்வேறு நூல்களை வாசித்து பிடித்ததைப் பகிர்ந்தனர். இதைக் கேட்டறிந்த இறையன்பு வாசிப்போர் மன்றத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களை சந்திக்க விரும்பினார்.

    இதனை தொடர்ந்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களும் தாங்கள் படித்த அவரின் நூல்கள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர். மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட இறையன்பு முதன்முதலில் வாசிப்போர் மன்றம் தொடங்கியதற்கும், 8 கூட்டங்கள் நடத்தி வாசிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு உணரச் செய்தமைக்கும் பாராட்டு க்கள் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக 9ம் வகுப்பு மாணவி நெகாசினி தான் வரைந்த இறையன்பு ஓவியத்தை வழங்கினார்.நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    • தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.

    கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் அகஸ்தி (வயது 12) என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் மாற்றுத்திறனாளி மாண வனின் குறும்புத்தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படமானது மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த படமா கவும், மாணவர்களின் தனித்துவம் மேன்மை அடையும் வகையிலும் அமைந்துள்ளது.

    இந்த படத்தை பாராட்டி தனியார் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கழகம் ஆனது சிறந்த இயக்குனருக்கான விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாணவி அகஸ்திக்கு வழங்கினார்.

    விருதை பெற்று க்கொண்ட மாணவி இது எனக்கு சிறந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இது மேலும், பல்வேறு விருதுகளை பெற ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.

    ×