ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி

நேற்று விடுமுறை என்பதால் முகமது உமர் தனது நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றுள்ளான்.சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி  7-ம் வகுப்பு மாணவன் பலி
Published on

ஆத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது42). இவரது மகன் முகமது உமர் (12). ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

ஆற்றில் மூழ்கி பலி

நேற்று விடுமுறை என்பதால் முகமது உமர் தனது நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றுள்ளான். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவனை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த டாக்டர்கள் முகமது உமர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆத்தூர் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com