என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தோழி வீட்டுக்கு சென்ற  பிளஸ்-2 மாணவி மாயம்
    X

    கோப்பு படம்.

    தோழி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்

    • அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நயினார் மண்டபம் சுதானா நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அரியாங்குப்பத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி முதலியார் பேட்டை அன்னை சிவகாமி மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அந்த மாணவி வீடு திரும்ப வில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் அந்த மாணவி இல்லை.

    இதையடுத்து மாயமான மாணவியின் தந்தை முதலி யார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×