search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smriti Irani"

    • குழந்தை திருமணம் ஒரு குற்றம்.
    • மக்களும் அரசோடு இணைய வேண்டும்

    புதுடெல்லி :

    2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.

    இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

    • அதானி குழும விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் 2 நாட்களாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்து வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக் கூடாது?

    எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால் ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

    • 1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
    • கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மாநிலங்களவையில், "ஒருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்த கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

    அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:-

    கருத்தொருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    போக்சோ சட்டம், 2012, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்றுதான் வரையறை செய்துள்ளது.

    குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும், குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

    ஆனால் குழந்தையால் குற்றம் செய்யப்பட்டால் போக்சோ சட்டத்தின் பிரிவு 34, குழந்தையால் குற்றம் செய்யப்படுவது மற்றும் சிறப்பு கோர்ட்டால் வயதை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது.

    ஒரு நபர் குழந்தையா, இல்லையா என்கிற கேள்வி, சிறப்பு கோர்ட்டில் எழுந்தால், அந்த நபரின் வயது தொடர்பாக திருப்தி அடைந்து, சிறப்பு கோர்ட்டே தீர்மானிக்கலாம். அப்படி தீர்மானிக்கிறபோது அதற்கான காரணங்களை கோர்ட்டு பதிவு செய்ய வேண்டும்.

    1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இது முதிர்ச்சி அடைவதற்கான வயது 18 என்று கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பால்ய விவாகம் என்று அழைக்கப்படுகிற குழந்தை திருமணம் பற்றிய மற்றொரு கேள்விக்கும் மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளார்.

    அதில் அவர், "தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என காட்டுகின்றன. ஆனால் இது குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தொடர்பான அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக இந்தளவுக்கு குழந்தைகள் திருமணங்கள் நடந்திருப்பது புகார் செய்யப்பட்டு இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு 523 குழந்தை திருமணங்களும், 2020-ல் 785 குழந்தை திருமணங்களும், 2021-ம் ஆண்டு 1,050 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    • வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.
    • 2021-22-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி சுபின் இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 


    வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வாயிலாக ஷகாரி வக்பு விகாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வக்பு நிலங்களில், வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க வக்பு நிறுவனங்கள், வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

    அதன்படி 2020-2021 ஆண்டில் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி நிதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த, மிகவும் பின்தங்கியோர், சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் நலன் மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க தீர்மானம் போட்டவர்களுடன் பாத யாத்திரை செல்கிறார்.
    • சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிக்கிறார்.

    சிம்லா:

    சட்டசபைத் தேர்தலையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய மக்களவைத் தேர்தலில் தனது கோட்டையான அமேதியில் தோல்வியடைந்தார், ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், அங்கு நிலைமை என்ன? காங்கிரஸ் தொடர்ந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறது.

    நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மாடுகளை அறுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.

    காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களுடன் அவர்கள் யாத்திரை நடத்தினார்கள். சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை உங்கள் தலைவர் ஆதரிக்கும் போது, ​​உங்கள் (காங்கிரசார்) ரத்தம் கொதிக்காதா, உங்கள் தலைவர் பசுவைக் கொல்பவர்களின் முதுகில் தட்டும்போது, ​​உங்கள் ரத்தம் கொதிக்காதா?

    ஒருபுறம் தங்கள் தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்களுக்கும், மறுபுறம், தங்கள் நாட்டை அவமானப்படுத்துபவர்களுக்கும், சிதைந்த இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார்.

    மங்கலம் :

    கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஜவுளி தொழில் அமைப்புகள் ,சைமா,மற்றும் பல்வேறு வர்த்தக அமைப்பினர் சார்பில் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைககளுக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

    விழாவிற்கு தலைமை வகித்து பேசிய இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ,அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் முயற்சியால் ஜவுளித்துறையில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செயலாளர் இரா.வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன்,அமைப்புச்செயலாளர் பா. கந்தவேல், தலைமை ஆலோசகர்வி.டி.கருணாநிதி,தொழில்நுட்ப ஆலோசகர் ஆர். சிவலிங்கம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச் செயலாளர் பாலாஜி, கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செல்வகுமார்,மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, மங்கலம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர். கோபால் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர். 

    • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதி மற்றும் கல்வி உதவி வழங்கப்படுகிறது.
    • கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தக் குழந்தைகளுக்கு இடம்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளதாவது:

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பால்,பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ், பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    இது போன்ற குழந்தைகள் 23 வயதை எட்டும் வரை கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன. பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் செலுத்தப்படுகிறது.

    இந்த தொகையை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 18 வயது முதல் 23 வயது வரை மாதாந்திர உதவித் தொகையை பெறலாம்.

    உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்யா திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படுவதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

    ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் இந்த குழந்தைகளுக்கு ரூ.20,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின்கீழ் 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ளது.
    • சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

    இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முடங்கின. இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 


    அவரை தொடர்ந்து மத்திய மந்திரி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய மந்திரிகள் இருவர் அடுத்தடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்மிரிதி இரானி மகள் மது விற்பனை பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்.
    • சமூக வலைதள பதிவுகளை அழிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

    மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டூவிட்டர் பதிவுகள், விடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது.
    • ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதிப்பு

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார்.

    இந்த விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரச்சினை எழுப்பி பேசினார். அப்போது அவர், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதித்து விட்டார். அவர் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தை, பெண்களை, ஏழைகளை, நலிவுற்றோரை அவமதித்து விட்டார்" என சாடினார்.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

    நண்பகல் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோனியா காந்தி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் வரிசைக்கு சென்றார். பீகார் பா.ஜ.க. எம்.பி. ரமாதேவியிடம், "இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?" என கேட்டார்.

    அப்போது அங்கே மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வந்து, சோனியா காந்தியை நோக்கி சைகை காட்டினார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் ஸ்மிரிதி இரானியின் எதிர்ப்பை சோனியா காந்தி புறக்கணிக்க முயற்சித்தார். ஆனால் ஏனோ திடீரென ஸ்மிரிதி இரானியை நோக்கி சோனியாவும் சைகை செய்து கோபமாக பேசினார்.

    சோனியாவும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதும், அவர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் சூழ்ந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த மோதலால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டபோது சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலேயும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா பொத்தாரும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

    பின்னர் ரமாதேவி நிருபர்களிடம் பேசுகையில், "இந்த விவகாரத்தில் என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள், நான் என்ன தவறு செய்தேன் என சோனியா கேட்டார். நான் அவரிடம், நீங்கள் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமித்ததுதான் தவறு என்று சொன்னேன்" என குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "பா.ஜ.க. எம்.பி.க்களிடம் மிரட்டும் தொனியில் சோனியா காந்தி பேசினார். என்ன விவாதிக்கப்படுகிறது என தெரிந்து கொள்ள விரும்பிய பா.ஜ.க. எம்.பி.க்களிடம் அவர் நீங்கள் என்னிடம் பேசக்கூடாது என கூறினார்" என்று தெரிவித்தார்.

    "மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என பிரச்சினையை அவர் திசை திருப்பினார்" என்றும் நிர்மலா சீதாராமன் சாடினார்.

    இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் குறிப்பிடுகையில், "இன்று மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் நடத்தை கொடூரமானது, மூர்க்கத்தனமானது. அவரை சபாநாயகர் கண்டிப்பாரா? விதிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா?" என குறிப்பிட்டுள்ளார்.

    சோனியா காந்திக்கு ஆதரவு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மக்களவையில் இருந்தபோது, 75 வயதான மூத்த பெண்மணியை (சோனியாவை) ஓநாய் பாணியில் சுற்றி வளைத்தனர். அவர் செய்ததெல்லாம் மற்றொரு மூத்த பெண் குழு தலைவரிடம் நடந்து சென்று பேசியதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, "ஒரு பெண்ணாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களவையில் உள்ள அவரது சொந்தக் கட்சி தலைவர் அவமதித்ததற்காக நாட்டின் முன் அவர் வந்து, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, "இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது. அத்தகைய கருத்துக்களை கூறுவது தவறு. இது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது தவறுதான்" என குறிப்பிட்டு பிரச்சினையை முடித்து வைத்தார்.

    • கோவாவில் செயல்பட்டு வரும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகம் சர்ச்சையில் சிக்கியது.
    • தனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    கோவாவின் அசகாவோவில் செயல்பட்டு வரும் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் என்பது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகமாகும். இதை ஸ்மிருதியின் மகள் ஜோயிஷ் இரானி இயக்குவதாக கூறப்படுகிறது.

    இந்த உணவகம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இறந்தவரின் பெயரிலேயே அந்த உணவகத்திற்கான குடி உரிமை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

    கோவா மாநில கலால் வரி விதிகளின்படி ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெறமுடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமம் பெறவில்லை. அதில் மதுக்கடை நடத்தப்படுகிறது. அந்த உணவகத்தின் மதுபான உரிமம் ஆண்டனி டிகாமாவின் பெயரில் உள்ளது. மேலும் கடந்த மாதம் தான் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்தோனி டிகாமா என்ற உரிமத்தில் பெயரிடப்பட்ட நபர் மே 2021-ல் காலமானார். இந்த அந்தோணி திகாமா மும்பையின் வைல் பார்லேயில் வசிப்பவர். மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அவரது மரணத்தை உறுதி செய்து இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரோட்ரிக்ஸ் இந்த மோசடியை அம்பலப்படுத்தினார்.

    மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர், தொழில்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் கலந்தாலோசித்து மெகா மோசடி குறித்து முழுமையான விசாரணை கோரி வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதி வர உள்ளது.

    இந்த சர்ச்சையை வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வெளிப்படுத்தியுள்ள போதிலும், கோவா அரசின் கலைத்துறை அந்த உணவகத்திற்கு நிகழ்ச்சி குறித்த செய்தியை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது காங்கிரஸ் தலைமையின் தூண்டுதலின் படி செய்யப்படுகிறது. எனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தவறானது. அவரது குணத்தை படுகொலை செய்வது மட்டுமல்லாமல், என்னை அரசியல் ரீதியாக கேவலப்படுத்தும் செயல் ஆகும் என தெரிவித்தார்.

    மேலும், தனது 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    ×