search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smriti Irani"

    • பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும்.
    • மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை. இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது என பேசினார்.

    ராகுல் காந்தி பேச்சுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    * காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த பெண்கள் மீதான படுகொலைகளுக்கு பதில் அளிப்பீர்களா?.

    * பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும்.

    * பாரத மாதா கொலை என ராகுல் பேசிய போது அதை கைதட்டி வரவேற்கிறார்கள். பாரத் என்றால் வட இந்தியா என தமிழ்நாட்டு தலைவர் ஒருவர் கூறுகிறார்.

    * மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்று வருகிறது.

    • ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் இந்தியா வந்திருந்தார்
    • இந்திய மந்திரிகள் நிர்மலாக சீதாராமன் மற்றும் ஸ்மிரிதி ரானி ஆகியோரை சந்தித்தார்

    ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகரான மோரி மசாகோ இந்தியா வந்திருந்தார். இந்தியா வந்த அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி ராணி ஆகியோரை சந்தித்துள்ளார்.

    இந்த தகவலை இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

    • 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது.

    இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்' என்று தெரிவித்தார்.

    பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2-வது முறையாக இடிந்து விழுந்தது. இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார். அன்புக்கடை நடத்தி வருவதாக ராகுல் காந்தி கூறி வரும் நிலையில், இந்து தர்மத்தை அவமதித்தல், சீக்கிய படுகொலை, இந்திய எதிரிகளுடன் கைகோர்த்தல், இந்திய ஜனநாயகத்தை சிறுமைப்படுத்த வெளிநாட்டினரை இழுத்தல் போன்றவைதான் ராகுல் காந்தியின் அன்புக்கான அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஸ்மிருதி இரானி பட்டியலிட்டார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    • மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    டெல்லியில் மத்திய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காண வில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவில் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.

    • ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • நீங்கள் புத்திசாலி, உங்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் கையாள முடியும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மாதவிடாய் பற்றி இரானி பேசுகிறார். 'மாதவிடாயை ஒரு நோய் என்று கருதும் கட்டுக்கதைகளை உடைத்து, அந்த 5 நாட்களும் எனக்கு மாதவிடாய் வருகிறது. அது ஒரு நோய் அல்ல. எல்லா பெண்ணுக்கும் அது உண்டு. நான், எனது அம்மா, நீங்கள் மற்ற மில்லியன் கணக்கான இந்திய பெண்கள் என அனைவருக்கும்.

    இப்போது நமக்கு உதவக்கூடியது விஸ்பர் சானிட்டரி பேடுகள். நீங்கள் புத்திசாலி, உங்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் கையாள முடியும். அப்படியென்றால் இந்த 5 நாட்கள்?' என்று கேட்டிருந்தார்.

    இந்த வீடியோவை பகிர்ந்த இரானி, '25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய நிறுவனத்துக்கான எனது முதல் விளம்பரம். இருப்பினும் தலைப்பு பேன்சியாக இல்லை. ஒரு சானிட்டரி பேட் விளம்பரம் சம்பந்தப்பட்ட மாடலின் கனவையே முடிவுக்கு கொண்டு வரக்கூடும். அதனால் பலர் இதுபோன்ற விளம்பரங்களை புறக்கணித்தனர். கேமிராவுக்கு முன்னால் என் வேலையை தொடங்க ஆவலுடன் நான் எஸ் சொன்னேன்! எல்லாவற்றிற்கும் மேலாக மாதவிடாய் சுகாதாரம் குறித்து பேசுவது ஏன் தடையாக இருக்க வேண்டும்?' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது.
    • பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும்.

    பெங்களூரு

    மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 5 கிலோ சிறு தானியங்கள் வழங்கப்படும்.

    கர்நாடகத்தில் 54 லட்சம் விவசாயிகள் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாய விளைபொருட்களை அரசு பஸ்களில் 50 கிலோ வரை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி, ஏழைகளுக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

    பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி பெண்களை சமமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது. தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் எப்போதும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

    • எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது.
    • காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

    பெலகாவி :

    கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது பா.ஜனதா கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்கேவின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பெலகாவி மாவட்டம் இண்டல்காவில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி 100 ஆண்டு வாழவேண்டும் என்று நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே, மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வயதில் மூத்தவர், ஒரு கட்சியின் பெரிய பதவியில் இருப்பவர், பல பொறுப்புகளை வகித்தவர் இவ்வாறு பேசுவது வெட்ககேடானது.

    காங்கிரசின் தலைவராக இருந்தாலும் நீங்கள் ராகுல்காந்திக்கு செருப்பாக தான் இருக்கிறீர்கள். எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது. குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?. பா.ஜனதா பற்றியும், பிரதமர் மோடியை பற்றியும் பேசுவதை நிறுத்திவிட்டு சொந்த கட்சி பிரச்சினைகளை முதலில் பாருங்கள். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியுமா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறியுள்ளது.
    • ஒவ்வொரு குடிமகனும் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான்.

    புதுடெல்லி

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்தில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடப்பதாகவும் கூறினார்.

    அவர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

    இந்தநிலையில் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஸ்மிரிதி இரானி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகள், இந்திய ஜனநாயக அமைப்புகளையும், பாராளுமன்றத்தையும் அவமதிக்கும் செயல்.

    ராகுல்காந்தி குடும்பத்தின் உத்தரவின்பேரில், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தார்களே? இதுவா ஜனநாயகம்?

    ராகுல்காந்தி குடும்பத்தின் உத்தரவின்பேரில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் புத்தகங்களை கிழித்து, மேஜை மீது ஏறி சபைத்தலைவரான துணை ஜனாதிபதியை இழிவுபடுத்தினார்களே? இதுவா ஜனநாயகம்?

    ஒவ்வொரு குடிமகனும் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான். ஏனென்றால் பாராளுமன்றம் என்பது எம்.பி.க்கள் இணைந்த அமைப்பு மட்டுமல்ல. அது இந்திய மக்களின் குரல்.

    எனவே, பாராளுமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்துள்ளார்.

    பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறியுள்ளது.

    அவர் சொல்வதுபோல், இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான அவரது செயல்பாடுகளால், காங்கிரசைத்தான் இந்திய மக்கள் அரசியல் அழிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை திருமணம் ஒரு குற்றம்.
    • மக்களும் அரசோடு இணைய வேண்டும்

    புதுடெல்லி :

    2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.

    இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

    • அதானி குழும விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் 2 நாட்களாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்து வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக் கூடாது?

    எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால் ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

    • 1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
    • கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மாநிலங்களவையில், "ஒருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்த கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

    அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:-

    கருத்தொருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    போக்சோ சட்டம், 2012, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்றுதான் வரையறை செய்துள்ளது.

    குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும், குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

    ஆனால் குழந்தையால் குற்றம் செய்யப்பட்டால் போக்சோ சட்டத்தின் பிரிவு 34, குழந்தையால் குற்றம் செய்யப்படுவது மற்றும் சிறப்பு கோர்ட்டால் வயதை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது.

    ஒரு நபர் குழந்தையா, இல்லையா என்கிற கேள்வி, சிறப்பு கோர்ட்டில் எழுந்தால், அந்த நபரின் வயது தொடர்பாக திருப்தி அடைந்து, சிறப்பு கோர்ட்டே தீர்மானிக்கலாம். அப்படி தீர்மானிக்கிறபோது அதற்கான காரணங்களை கோர்ட்டு பதிவு செய்ய வேண்டும்.

    1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இது முதிர்ச்சி அடைவதற்கான வயது 18 என்று கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பால்ய விவாகம் என்று அழைக்கப்படுகிற குழந்தை திருமணம் பற்றிய மற்றொரு கேள்விக்கும் மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளார்.

    அதில் அவர், "தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என காட்டுகின்றன. ஆனால் இது குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தொடர்பான அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக இந்தளவுக்கு குழந்தைகள் திருமணங்கள் நடந்திருப்பது புகார் செய்யப்பட்டு இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு 523 குழந்தை திருமணங்களும், 2020-ல் 785 குழந்தை திருமணங்களும், 2021-ம் ஆண்டு 1,050 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    ×