search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samuthirakani"

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #RRR #Rajamouli
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், டேய்சி ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் டேய்சி ஜோன்ஸ் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.


    படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குஜராத் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியும் என்று நம்புவதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.



    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



    இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

    இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. #RRR #Rajamouli
    பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை. பாகுபலிக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

    ராஜமவுலியின் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.



    இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.


    படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் ‘மக தீரா’ படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமதொங்கா’ ஆகிய படங்களிலும் ராஜமவுலி பணிபுரிந்துள்ளார். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, இயக்குநராக ராஜமவுலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
    சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார். 

    அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.



    அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

    இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya

    'பூமராங்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. #Atharvaa #RKannan
    அதர்வா நடிப்பில் 'பூமராங்' வருகிற மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை இயக்குவதுடன், தனது 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் மூலமாக ஆர்.கண்ணன் தயாரிக்கவும் செய்கிறார். சமுத்திரகனி, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.



    ரதன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. ஆக்‌‌ஷன் கதையில் உருவாகும் 
    இந்த படத்திற்கு தற்காலிகமாக `தயாரிப்பு எண் : 3' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. #Atharvaa #RKannan

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.


    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya
     
    ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தமிழ் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #RRR #Samuthirakani
    ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து வரலாற்று படமொன்றி இயக்கி வருகிறார். ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர். ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

    இந்த படத்தின் மூலம் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போதைய தகவல்படி, சமுத்திரக்கனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழு தற்போது சண்டிகர் விரைந்துள்ளது. அந்த சில முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் சமுத்திரக்கனி, தான் இயக்கியிருக்கும் நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸ் பணிகளை தொடர்வார் என்று கூறப்படுகிறது.



    முன்னதாக நாடோடிகள் படத்தை பார்த்த ராஜமவுலி, சமுத்திரக்கனியை பாராட்டியதுடன் தனது வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தை சந்திக்க அழைப்பு விடுத்ததாக சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஜமவுலி படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் ராம் சரணின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடிக்கிறார்கள். #RRR #RamCharan #JrNTR #Samuthirakani

    ஜிப்ஸி படத்தை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #RajuMurugan #Sasikumar #Samuthirakani
    ஜோக்கர் படத்தை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. ஜீவா - நடாஷா சிங் நடித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான வெரி வெரி பேட் என தொடங்கும் இந்த பாடலில், சமூக போராளிகளான நல்லகண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, கிரேஸ் பானு, பியூஸ் மானுஷ் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர்.

    ஜிப்ஸி ரிலீசுக்கு இடையே ராஜூ முருகன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார். அந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியை இயக்குநர் ராஜூ முருகன் அனுகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கதை கேட்ட இருவருக்குமே படத்தின் கதை பிடித்திருக்கிறதாம்.



    இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஜிப்ஸி ரிலீசுக்கு பிறகே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. #RajuMurugan #Sasikumar #Samuthirakani

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் சமுத்திரக்கனி கூறினார். #JayalalithaaBiopic #Samuthirakani
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. சசிகலா வேடத்தில் சாய் பல்லவியை எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்களும் வந்தன. ஆனால் இதுபற்றி ஏ.எல்.விஜய் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.



    இதற்கிடையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனி, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

    ஆனால், அது எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது சர்ப்ரைஸ். படத்தின் ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலிலதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் தவிர, இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி ஈடுபட்டுள்ளார். #JayalalithaaBiopic #Samuthirakani #ALVIjay

    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali
    ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .

    மம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.



    ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

    “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.

    பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali

    பேரன்பு டிரைலர்:

    ×