என் மலர்

  சினிமா

  பேரன்பு
  X

  பேரன்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali
  ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .

  மம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.  ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

  “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.

  பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali

  பேரன்பு டிரைலர்:

  Next Story
  ×