என் மலர்

  நீங்கள் தேடியது "Ajay Devgn"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் ஸ்டண்ட் மாஸ்டருமான வீரு தேவ்கன், உடல் நலக்குறைவு காரணமாக இன்று மும்பையில் காலமானார்.
  பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் இன்று காலமானார். 1941-ல் பஞ்சாபில் பிறந்த வீரு தேவ்கன் 80-க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். 1999-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் கி கசம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப்பச்சன், மனீஷா கொய்ராலா, சுஷ்மிதா சென் போன்றோர் நடித்திருந்தனர். மேலும் ஒரு சில சில படங்களில் வீரு தேவ்கன் நடித்தும் இருக்கிறார். 

  உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வீரு தேவ்கன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  வீரு தேவ்கனுக்கு வீணா தேவ்கன் என்ற மனைவியும், அஜய் தேவ்கன், அனில் தேவ்கன் என்ற இரண்டு மகன்களும், நீலம், கவிதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #RRR #Rajamouli
  பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள். 

  ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

  நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #NithyaMenen

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #RRR #Rajamouli
  பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

  இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், டேய்சி ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் டேய்சி ஜோன்ஸ் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.


  படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குஜராத் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியும் என்று நம்புவதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.  படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்தில் மீடூ புகாரில் சிக்கிய நடிகர் அலோக் நாத் நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #DeDePyaarDe
  ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார்.

  இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.  இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். அலோக் நாத் நடித்த படம் என்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று இணையதளங்களில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். #DeDePyaarDe #RakulPreetSingh #AlokNath #MeToo

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். #KeerthySuresh #AjayDevgn
  மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

  சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்தது. தற்போது இந்தி பட உலகுக்கும் போய் உள்ளார். பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை கதை படமாகிறது.  இதில் அஜய் தேவ்கன் ரகீமாக நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். அமித் சர்மா இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

  இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இந்தி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சவாலான வேடங்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். இந்தி படமும் அப்படித்தான் இருக்கும். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதியை இந்த படம் பேசும்” என்றார். போனிகபூர் சிபாரிசின் பேரிலேயே கீர்த்தி சுரேசுக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்தியில் கீர்த்தி சுரேஷ் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. #KeerthySuresh #AjayDevgn

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. #RRR #Rajamouli
  பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை. பாகுபலிக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

  ராஜமவுலியின் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.  இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.


  படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.

  படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் ‘மக தீரா’ படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமதொங்கா’ ஆகிய படங்களிலும் ராஜமவுலி பணிபுரிந்துள்ளார். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, இயக்குநராக ராஜமவுலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் `இந்தியன்-2' படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
  22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

  முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

  இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.  வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.

  அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். 2.0 படத்தைபோல் இந்தியன்-2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படமாக தயார் செய்கின்றனர். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #STR
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைபெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், லஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.

  நேர்மையே கொள்கையாக வைத்து இருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வதுபோல படத்தின் முடிவு அமைந்து இருந்தது.

  1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ‌ஷங்கர் இயக்குகிறார்.

  ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.  இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

  சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.

  முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.

  கமல் தனது கட்சியின் கொள்கைகளில் முக்கியமாக ஊழல் ஒழிப்பையே முன்மொழிந்து வருகிறார். கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள். #Indian2 #KamalHaasan #STR

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #STR
  22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள். 

  ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.

  இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.  அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #STR

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் `இந்தியன்-2' படத்தின் கலை பணிகள் பூஜையுடன் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
  22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை சமீபத்தில் ஆய்வு செய்தார்கள்.

  இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ஐ, 2.0 படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியன்-2 முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

  கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிராலம் ஒருவர் இணைந்துள்ளார். #Indian2 #KamalHaasan
  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது. 

  கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இந்தியன்-2 ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையாக உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin