'ஷைத்தான் ' படம் : ரூ 200 கோடி வசூல் செய்து சாதனை

இப்படம் கடந்த மார்ச் 8-ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.'பைட்டர்' படத்திற்கு பின் 2024 -ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2- வது இந்தி படம் என்ற சாதனையை இப்படம் பெற்று உள்ளது.
'ஷைத்தான் ' படம் : ரூ 200 கோடி வசூல்  செய்து சாதனை
Published on

பிரபல இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கிய இந்தி திரைப்படம் 'ஷைத்தான்'. இப்படம் 'வாஷ் என்ற குஜராத்தி திரைப்படத்தின் 'ரீமேக்' படமாகும்.

இப்படத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன், ஜோதிகா,  மாதவன், ஜான்கிபோடிவாலா ஆகியோர் நடித்துள்ளனர்.சுமார் ரூ.65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது.

இப்படம் கடந்த மார்ச் 8-ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது திரையரங்குகளில் 3- வது வாரமாக வெற்றிகரமாக இப்படம் ஓடி வருகிறது.

இந்நிலையில் இப்படம் தற்போது 'சூப்பர்ஹிட்' ஆகியுள்ளது.உலகம் முழுவதும் இப்படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் சாதனை படைத்து ரூ.200 கோடியை குவித்துள்ளது.

ஹிருத்திக் ரோஷன்- தீபிகா படுகோன் நடித்த 'பைட்டர்' படத்திற்கு பின் 2024 -ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2- வது இந்தி படம் என்ற சாதனையை இப்படம்  பெற்று  உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com