என் மலர்
சினிமா

ராஜமவுலி படத்தில் நித்யா மேனன்
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #RRR #Rajamouli
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள்.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.
நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #NithyaMenen
Next Story






