என் மலர்

  நீங்கள் தேடியது "Alok Nath"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்தில் மீடூ புகாரில் சிக்கிய நடிகர் அலோக் நாத் நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #DeDePyaarDe
  ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார்.

  இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.  இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். அலோக் நாத் நடித்த படம் என்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று இணையதளங்களில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். #DeDePyaarDe #RakulPreetSingh #AlokNath #MeToo

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்திய பெண் டைரக்டரிடம், ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் அலோக்நாத் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். #AlokNath #MeToo
  மும்பை :

  பிரபல இந்தி நடிகர் அலோக்நாத். இவர் பல பாலிவுட் படங்களில் தந்தை வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மீது இந்திப்பட பெண் டைரக்டரும், எழுத்தாளருமான வின்டா நந்தா சமீபத்தில் கற்பழிப்பு புகார் வெளியிட்டார்.

  இதைத்தொடர்ந்து நடிகர் அலோக்நாத் மற்றும் அவரது மனைவி ஆசு ஆகியோர் மும்பையில் உள்ள அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பெண் டைரக்டர் வின்டா நந்தாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.

  மனுவில், எங்கள் புகாரை கருத்தில் எடுத்துக்கொண்டு அம்போலி போலீசார் வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும். அடிப்படை ஆதாரம் அற்ற இந்த புகாரின் காரணமாக வீட்டில் இருந்து வெளியில் தலை காட்ட முடியாமல் தவிக்கிறோம். இதற்கு காரணமான வின்டா நந்தா 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

  இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அலோக்நாத்தின் மனைவி ஆசு நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  ×