search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Gypsy"

  ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன், ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துவதாக தெரிவித்தார்.
  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

  விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது,

  ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் அதை செய்து கொடுத்தார். நான் மருத்துவமனை போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.  முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்" என்றார்.`

  ஜீவா நடிப்பில் கீ படம் வருகிற வாரத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். #Jiiva #AjithKumar
  ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் ’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

  விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’.

  இவ்வாறு ஜீவா தெரிவித்தார். #Jiiva #AjithKumar

  ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் நடித்தது பற்றி பேசிய ஜீவா, படத்தில் தன்னுடன் பயணிகும் குதிரையிடம் மிதிவாங்கியதாக கூறினார். #Gypsy #Jiiva #NatashaSingh
  ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறும் போது, ’கற்றது தமிழ், ஈ போன்ற கதைகளில் ஏன் நடிப்பதில்லை என கேட்டுகொண்டே இருந்தனர். அப்படி ஒரு கதைதான் ஜிப்ஸி.

  இந்த கதையை ராஜு முருகன் சொன்னபோதே அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. நாகூர், வாரணாசி, ஜோத்புர், காஷ்மீர் என இந்தியா முழுவதும் படமாக்கி இருக்கிறோம். வெள்ளை குதிரையொன்றும் படம் முழுக்க என்னுடன் நடித்திருக்கிறது.  அதற்கு கடலைமிட்டாய் வழங்கி நட்பாக்கிக் கொண்டேன். நடனம் ஆடும் திறமை கொண்ட அந்த குதிரை பல முறை என் கால்களை மிதித்திருக்கிறது. குதிரை மிதித்தால் எப்படி வலிக்கும் என்ற அனுபவம் சிலருக்கு இருக்கும். எனக்கு அந்த அனுபவம் இப்படத்தில் ஏற்பட்டது’ என்றார்.

  இயக்குனர் கூறும்போது, ’ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட வி‌ஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா. எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு. மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்’ என்றார். #Gypsy #Jiiva #NatashaSingh #RajuMurugan

  ஜிப்ஸி படத்தை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #RajuMurugan #Sasikumar #Samuthirakani
  ஜோக்கர் படத்தை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. ஜீவா - நடாஷா சிங் நடித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான வெரி வெரி பேட் என தொடங்கும் இந்த பாடலில், சமூக போராளிகளான நல்லகண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, கிரேஸ் பானு, பியூஸ் மானுஷ் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர்.

  ஜிப்ஸி ரிலீசுக்கு இடையே ராஜூ முருகன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார். அந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியை இயக்குநர் ராஜூ முருகன் அனுகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கதை கேட்ட இருவருக்குமே படத்தின் கதை பிடித்திருக்கிறதாம்.  இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஜிப்ஸி ரிலீசுக்கு பிறகே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. #RajuMurugan #Sasikumar #Samuthirakani

  ஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gypsy #Jiiva
  குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  அதன் தொடர்ச்சியாக படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது. ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.  நிஜவாழ்வில் களப்போராளிகளாக இருக்கும் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உட்பட பலர் இந்த பாடலில் தோன்றுகின்றனர். அவர்களுடன் நடிகர் ஜீவா, ராஜு முருகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்த பாடலை ராஜவேல் நாகராஜன் இயக்கி உள்ளார்.
  ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `ஜிப்ஸி’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நடாஷா சிங் தமிழக ரசிகர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். #Gypsy #NatashaSingh
  ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் `ஜிப்ஸி’. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில்துவங்கியது. இதில் ஜீவா, நாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

  முதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. ‘‘மிஸ்.இமாச்சல் பிரதேசம் ஆன நடாஷா சிங் படித்தது பொறியியல். நடாஷா மாடலிங் குக்காக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.   நாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் என்னிடம் அதற்குள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். செம ஆச்சர்யமாக இருக்கு!’’ என்று படபடக்கிறார் நடாஷா. #Gypsy #Jiiva #NatashaSingh
  ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், ராஜு முருகன் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று துவங்கியிருக்கிறது. #Gypsy #Jiiva
  ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. 

  ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதில் ஜீவா ஜோடியாக இமாச்சலப் பிரதேச மாடல் நடாசா சிங் நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். 

  குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

  இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார். #Gypsy #Jiiva #NatasaSingh
  ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #GypsyFirstLook #Gypsy
  'குக்கூ' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இப்படத்தை அடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். 

  இதில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார். வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை 12.01 வெளியிட இருக்கிறார்கள். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ படத்தின் போஸ்டர் அனைவரையும் கவர்ந்ததால், இப்படத்தின் போஸ்டர் மீது அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். #GypsyFirstLook #Gypsy
  ×