என் மலர்
சினிமா

ஜீவா படத்தின் முக்கிய அறிவிப்பு
ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #GypsyFirstLook #Gypsy
'குக்கூ' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இப்படத்தை அடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கிறார். வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை 12.01 வெளியிட இருக்கிறார்கள். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ படத்தின் போஸ்டர் அனைவரையும் கவர்ந்ததால், இப்படத்தின் போஸ்டர் மீது அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். #GypsyFirstLook #Gypsy
Next Story