search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi murder case"

    10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி என்று ரஜினியின் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #PMModi #Rajinikanth
    மதுரை:

    மதுரை செல்லூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    நல்லா வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடி பலசாலி என ரஜினி கூறியிருப்பார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்க வேண்டியதில்லை. 7பேரின் விடுதலை விவகாரத்தில் மாநில அரசிடம் முழுமையான வேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #PMModi #Rajinikanth
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதுவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. #TNGovernor #Banwarilalpurohit
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு எடுக்கலாம் என்றும் இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வெளியானதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை உடனடியாக கூடி 7 பேரையும் விடுதலை செய்யும் பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால் கவர்னர் பன்வரிலால் இதில் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் 7 பேர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவர்னர் இதில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழக அரசும் கவர்னர் பன்வாரிலாலுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதுவது பற்றி ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கவர்னரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கடிதம் எழுத உள்ளார்.

    அதில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்படுகிறது. தற்போது விடுமுறை தினம் என்பதால் தீபாவளிக்குப் பின்பு இந்த கடிதம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கவர்னர் முடிவு எடுக்கவில்லை, தீர்ப்பு வெளியான பின்பே முடிவு எடுப்பார். இதனால்தான் அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #Banwarilalpurohit
    ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய கோரி கவர்னருக்கு 2 ஆயிரம் பேர் தபால் அனுப்பினார்கள். #RajivGandhimurdercase #BanwarilalPurohit

    காங்கயம்:

    ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    நீண்ட நாட்களாக ஜெயிலில் தவிக்கும் அவர்களை விடுதலை செய்ய கோரி காங்கயத்தில் புரட்சிகர முன்னணி சார்பில் கவர்னர் பன்வாரிலாலுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

     


    காங்கயம், வெள்ளகோவில், நத்தகாடையூர் பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இதில் பங்கேற்று கவர்னருக்கு மனு அனுப்பினார்கள்.

    புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி திருநாவுக்கரசு தலைமையில் இந்த மனு அனுப்பப்பட்டது. காங்கயம் தபால் நிலையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து வந்து மனுக்களை அனுப்பினார்கள். #RajivGandhimurdercase #BanwarilalPurohit

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் வக்கீல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். #RajivGandhi #Perarivalan
    கோவில்பட்டி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அக்கறை காட்டி வரும் தமிழக அரசினை கண்டித்தும், ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறப்பு சட்டம் இயற்றி உடனடியாக தூக்கிலிட வேண்டும்,

    மேலும் அவர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி வக்கீல் பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தினை தொடங்கினார்.

    அவர் தனது உடலில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் ராஜீவ் காந்தி படத்தினை மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த அய்யலுச்சாமியை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #RajivGandhi #Perarivalan
    பா.ஜனதாவுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை என்று திருவாரூரில் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #BJP #LaGanesan

    திருவாரூர்:

    திருவாரூரில் பா.ஜனதா கட்சியின் பொற்றாமரை அமைப்பு சார்பில் கலை இலக்கிய நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இல. கணேசன் எம்.பி. கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவுடன் சேர வேண்டும் என்று தி.மு.க.வினர் கனவிலும் நினைக்க மாட்டார்கள். பா.ஜ.க.வுக்கும் தி.மு.க. வுக்கும் எந்த உறவும் இல்லை. அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பழகி வருகின்றோம். ஆனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு உண்டு. இதைப்போல அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய பா.ஜனதா அரசு இணக்கமாகச் செயல் படுகிறது.

    பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கத்தை யாரோ ஒரு சிலர் வழக்குத் தொடுத்தார்கள் என்பதற்காக அதை மாற்றி தீர்ப்பு வந்து இருக்கலாம். பொதுவாக பக்தர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மக்கள் எதிர்க்காமல் இருக்கலாம். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிராக தேவசம் போர்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. அதில் வேறு விதமான நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பினால் பெண்கள் அதிகளவில் சபரிமலைக்கு செல்வார்கள் என்று கற்பனை செய்தால் ஏமாத்து போவார்கள் . விளம்பரத்திற்காக சிலர் வேண்டுமானால் செல்ல முயற்சிக்கலாம்.

    தகாத உறவு குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த சமுதாயம் தர்மத்தின் அடிப்படையில் உள்ள சமுதாயம் அதனால் இந்த சமுதாயத்தில் அந்த தீர்ப்பினால் எந்த மாற்றத்தையும் உண்டாக்க முடியாது என்பது என் கருத்து. இதனால் இந்த சமுதாயத்தில் எந்தத் தவறான மாற்றமும் வராது.


    ராஜீவ் கொலை வழக்கில குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து யார் பேசினாலும் பலன் இல்லை. கவர்னர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

    நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால் எச். ராஜாவை கைது செய்ய முடியாது என காவல்துறை உயர் அதிகாரியே தெரிவித்துள்ளார். இதுபற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது பெரிய வி‌ஷயமல்ல.

    நாடு முழவதும் எங்களுக்கு ஆதரவு கூடி வருகிறது. அதனால் பாராளுமன்றத்தில் தனித்து இருந்து தற்போது பெற்ற வெற்றியை விட கூடுதலான இடங்களை பெறுவோம். இன்னும் 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர்.

    இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார். #BJP #LaGanesan

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு கவர்னர் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது. #RajivCaseConvicts #TNGovernor
    சென்னை:

    ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலாலுக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியது.

    கவர்னர் பன்வாரிலால் அந்த பரிந்துரையை ஏற்று ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.

    இதற்கிடையே ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் உறவினர்கள் கவர்னரை சந்தித்து 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    பன்வாரிலாலை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரும் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.


    மேலும் ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த முடிவையும் எடுக்க கூடாது” என்றும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான மனுவையும் கவர்னரிடம் அவர்கள் தாக்கல் செய்தனர்.

    அவர்களது கோரிக்கையையும் கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கும் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகே கவர்னர் உரிய முடிவை எடுத்து அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    இதனால் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. 7 பேர் விடுதலை மேலும் தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor
    ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் பொறுப்பு என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #RajivGandhiAssassination #BanwarilalPurohit
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

    ராஜபக்சேவே இந்திய அரசு உதவியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்; அதற்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தப்படுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, எம்.எல்.ஏ. சண்முகநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    ஹெச்.ராஜா என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் பொறுப்பு.

    வைகோ புகாருக்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முறைப்படியான ஆணைகளை தான் வழங்கி உள்ளது. புஷ்கரம் விழா சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளதாக வந்த புகார் குறித்து ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhi #RajivGandhiAssassination #RajivGandhimurdercase #BanwarilalPurohit
    ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை ஒன்றியம் பாகானத்தம் ஊராட்சி ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகாத்மா காந்தி சமூக நல அறக்கட்டளை நிர்வாகியாக உள்ளார்.

    இவர் தமிழக குடியரசு தலைவர், முதல்வர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த படுகொலை சம்பவத்தில் ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர்காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானார்கள். எனவே இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலையும்.

    எனவே அவர்களை விடுதலை செய்வதை தவிர்த்து நிரந்தர ஆயுள்தண்டனை வழங்க வலியுறுத்தி காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி காலை 5.55 மணி முதல் வடமதுரை காந்தி சிலை முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போகிறேன். இதே உணர்வு கொண்ட பலரையும் போராட்டத்திற்கு அழைத்துள்ளேன். எனவே இந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #RajivCaseConvicts
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அற்புதம்மாள் கூறியதை போன்று இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். ஆளுனர் நல்ல முடிவு எடுப்பார். 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.



    தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கு மின் வாரியத்தின் திட்டமிடாத நடவடிக்கையே காரணமாகும். நீர் நிலைகளை உரிய நேரத்தில் தூர்வாராமல் வெறும் கணக்கு காட்டி பணத்தை எடுத்துக் கொண்டதாலேயே காவிரி, டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. உபரிநீர் வீணாக கடலில் கலக்க நேரிட்டுள்ளது.

    விரிவுப்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலைகள் பலவும் தமிழகத்தில் உள்ள நிலையில், விளை நிலங்களை அழித்து கொண்டு வரப்படும் 8 வழிச்சாலை தேவையற்றது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசால் செயல்படுத்தவும் முடியாது.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயம் காரணமாகவே முன் கூட்டியே அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் வாக்கு கேட்பது எங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும். அ.தி.மு.க.வினர் டெபாசிட் பெறுவதற்காக போராடுகின்றனர்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும். குக்கர் சின்னத்தை சட்டப்படி கோருவோம். எதிலும் அலட்சிய போக்குடன் செய்யப்படும் இந்த அரசை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவர்.

    அரசே மூட வேண்டிய சூழலில் உள்ள நிலையில், அரசு பள்ளிகளை மூட முடி வெடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பள்ளிகள் திறக்கப்படும். அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது என்பது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வருவதில் இருந்தே தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #RajivCaseConvicts
    7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. #Perarivalan #RajivGandhiCase #banwarilalpurohit
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    பிறகு அவர்களது தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.கடந்த 27 ஆண்டுகளாக இவர்கள் ஜெயிலில் உள்ளனர்.

    இவர்கள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசே இது தொடர்பான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

    அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதோடு 3 நாட்களில் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் 7 பேரையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார்.

    தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து இருப்பதால், இதில் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு கூறியது.

    இதனால் இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே சட்ட ரீதியில் மோதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    கடந்த 6-ந் தேதி இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டது. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து இது பற்றி ஆலோசிக்க நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த பரிந்துரை நேற்றே உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த பரிந்துரை கவர்னர் கையில் உள்ளது.

    கவர்னர் இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவை முடிவு செய்து பரிந்துரைப்பதை கவர்னர் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்ளது. அமைச்சரவை முடிவை கவர்னர் நிராகரிக்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கவர்னர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்த வி‌ஷயத்தில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனது நிலைப்பாட்டை தெரிவிப்பாரா? அல்லது மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்டு தலையாட்டுவாரா என்ற கேள்விக்குறி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் 4 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த 4 விதமான முடிவுகள் வருமாறு:-

    1. தமிழக அமைச்சரவை பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டு 7 பேரை விடுதலை செய்ய உடனே உத்தரவிடலாம்.

    2. அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. எனவே கவர்னர் பன்வாரிலால் 7 பேர் விடுதலை பரிந்துரையை சிறிது நாட்கள் கிடப்பில் போடலாம். அவர் மேலும் கால தாமதமும் செய்யலாம்.

    3. முன்னாள் பிரதமரை படுகொலை செய்துள்ள மிக முக்கியமான வி‌ஷயம் என்பதால் 7 பேரை விடுதலை செய்வது பற்றி மத்திய அரசிடம் கவர்னர் யோசனை கேட்கலாம்.



    4. தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய கவர்னர் உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது.

    இந்த 4 விதமான முடிவுகளில், எந்த முடிவை எடுப்பது என்பது பற்றி கவர்னர் பன்வாரிலால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே கவர்னர் முடிவு விரைவில் தெரியும் என்று கூறப்படுகிறது. #Perarivalan #RajivGandhiCase
    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #Perarivalan #RajivGandhiCase #Bharathiraja
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மாநில அரசின் கைகளில் உள்ளது என சமீபத்தில் வெளியான தீர்ப்பை அடுத்து, அவர்களது விடுதலை குறித்த பரபரப்பு அதிகமானது.

    இதையடுத்து, இன்று மாலை அமைச்சரவை கூட்டப்பட்டு இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவித்து இருந்தது. கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்நிலையில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக இயக்குனர் பாரதி ராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதி ராஜா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்து, விடுதலை செய்யலாம் என கூறிய ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு நன்றி என தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் விடுதலைக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதைத்தொடர்ந்து, 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து தங்களது இளமையும், வாழ்வையும் இழந்த இவர்கள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து துன்ப பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்ற அம்பேத்கரின் கருத்தை உண்மையாக்கி, அவர்கள் 7 பேரின் துன்ப பூட்டை உங்கள் ஆட்சி அதிகாரம் மூலம் திறந்து விடுமாறும், அவர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து, குடும்பத்துடன் எஞ்சிய வாழ்வை அனுபவிக்க வழிசெய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. #Perarivalan #RajivGandhiCase #Bharathiraja
    ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #RajivGandhimurdercase #Elangovan

    அவனியாபுரம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குறித்து ஏற்கனவே சோனியா காந்தி ‘‘மறப்போம், மன்னிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

    எனவே 7 பேர்களையும் விடுதலை செய்வது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் விலை உயர்ந்து வருகிறது. இது விரைவில் ரூ.100-ஐ எட்டிவிடும்.


    நாளை நடைபெறும் பந்த்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றன.

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமையாகும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் இதுவரை வர வில்லை.

    தற்போது நடிகை கோவை சரளாவும் கட்சி ஆரம்பிக்க உள்ளார். மக்கள் செல்வாக்கு உள்ளதா என்று நடிகர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhimurdercase #Elangovan

    ×