search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi murder case"

    • நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரையும் விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.
    • பேரறிவாளனைப் போலவே மீதமுள்ள 6 பேரும் தங்களுக்கான நிவாரணங்களை கேட்க தகுதி உடையவர்கள்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர்.

    அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.

    32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. பேரறிவாளன் போலவே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது முடிவு எடுக்க கவர்னர் காலம் தாழ்த்தியதை கணக்கில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் இன்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

    மேலும், பேரறிவாளனைப் போலவே மீதமுள்ள 6 பேரும் தங்களுக்கான நிவாரணங்களை கேட்க தகுதி உடையவர்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை.
    • பழங்களை மட்டும் உட்கொண்டு வருகிறார்.

    வேலூர்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

    ஆனால் முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரியும், தன் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும் ஜெயிலில் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். 3-வது நாளாக நேற்றும் ஜெயிலில் வழங்கப்படும் உணவை அவர் உண்ணவில்லை. ஆனால் பழங்களை மட்டும் உட்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். அவர் மவுன விரதமும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.
    • ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

    சேலம்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு அக்னிபாத் திட்டம். பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்.சிடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.

    ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் போல் தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க முயற்சிக்கிறார் மோடி. காங்கிரஸ் பொதுத்துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க. பொதுத்துறையை அழித்துவிட்டு தனியார் துறையை வளர்க்கிறது.

    பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும். ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்ததக்கது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. தங்கள் கொள்கையை முறையாக பின்பற்றியுள்ளனர். திரவுபதி என்ற பெயருக்காகவே அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க கோரி அவரது மனைவி நளினியும், மாமியார் பத்மாவும் சிறைத் துறைக்கு மனு அளித்திருந்தனர்.

    இந்த மனுவை ஜெயில் சூப்பிரண்டு கடந்த மாதம் 28-ம் தேதி நிராகரித்திருந்தார். முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பரோல் விடுப்பு வழங்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பரோலில் உள்ள எனது மகள் நளினிக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு பல் தொடர்பாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனக்கு வயது மூப்பு காரணமாக நளியை பராமரிக்க முடியவில்லை. முருகன் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் வந்தது இல்லை. மேலும் முருகன் மீது எந்த வழக்கும் எந்த கோர்ட்டிலும் நிலுவையில் இல்லை.

    ஆகவே சிறைக் கண்காணிப்பாளர் கடந்த மாதம் 28-ம் தேதி தனது மனுவை நிராகரித்து உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து தனது மகளின் கணவரான முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

    பழனி:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

    இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தபால் அட்டையில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி பழனி தலைமை தபால் அலுவலகம் முன்புள்ள பெட்டியில் போட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழக கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது என்றார்.

    இதேபோல தேனியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே சஞ்சய்தத் விடுதலையானார் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தநிலையில் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் எரவாடா சிறை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.


    இதையடுத்து பேரறிவாளன் தரப்பினர் தகவலறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தனர். அதில் சஞ்சய்தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கி இருந்தீர்களா? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு சிறை அதிகாரிகள் அளித்த பதிலில் சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுடன் கலந்தாலோசிக்காமல் மாநில அரசே சஞ்சய் தத்தை விடுதலை செய்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

    சஞ்சய்தத் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை சிறை காலத்தில் சேர்த்துள்ளனர். அதையும் கணக்கிட்டுதான் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டுள்ளார். சஞ்சய்தத் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர்.

    சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்ததை போலவே அரசமைப்பு சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என அவரது தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri
    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தியோடு மறைந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேரையும் விடுதலை செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். எனவே, இந்த விவகாரம் மீண்டும் ஆளுநரிடமே சென்றுள்ளது.

    7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தன் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோப்புப்படம்

    இந்த தீர்ப்பு குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

    ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது, எது நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும்  என்றும் அழகிரி கூறினார்.

    இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். #RajivMurderCase
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் இயற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்ககோரி தமிழக கவர்னருக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அதில், ‘எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆவணங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு கொடுத்தோம். அந்த மனுவை விரைவாக பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் இன்று விசாரித்தனர்.

    மனுதாரர் சார்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி வாதிட்டார். மனு மீதான விசாரணையை வருகிற 27ந்தேதி (சனிக்கிழமைக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.  #RajivMurderCase
    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. #Arputhammal #HumanChainProtest
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
     
    அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    இதற்கிடையே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார். 

    இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.



    சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். திராவிடர் கழகம், திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை இதில் பங்கேற்றன.  

    பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதேபோல், புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. #Arputhammal #HumanChainProtest
    தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். #Arputhammal
    கடலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று கடலூருக்கு வந்த அற்புதம்மாள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

    இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் மீண்டும் அவரை சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். எனது 71 வயதிலும் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே போராட்டம் நடத்தி வருகிறேன்.

    அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    மும்பை குண்டு வெடிப்பில் 254 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பிரபல நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சி.பி.ஐ. விசாரித்த அந்த வழக்கில் அந்த மாநில கவர்னரே அவரை விடுதலை செய்தார்.

    ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரின் சட்டப் படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Arputhammal

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்பட்டத்தால் 7 தமிழர்களை விடுவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்து உத்தரவு பிறப்பிக்காமல், ஆளுநர் தொடர்ந்து கெட்டியான அமைதி காப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 161-வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ், மாநில அரசு இந்த 7 பேரையும் முன்விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால், அதை தமிழக ஆளுநர் எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.

    ஆனால் ஒரு அமைச்சரவை தீர்மானத்தை இத்தனை மாதங்களாக ஆளுநர் நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டு இருப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை; மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநருக்கு அறிவுறுத்தவும் கோரவில்லை.

    தற்போது பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர், 7 தமிழர்களின் விடுதலை, நீட் தேர்வு மசோதாக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடுவது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிபந்தனை வைத்திருக்கலாம்.

    ஆனால் அப்படியெல்லாம் நிபந்தனை வைத்திருக்கிறாரா என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வோருடன் கூட்டணி என்று தொடக்கத்திலிருந்து அறிவித்து, மாநில உரிமைகளை நசுக்கி, தமிழக மக்களை நாசப்படுத்தும் திட்டங்களை வேண்டுமென்றே திணித்த பா.ஜ.க.வுடன் இப்போது தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் முதல்-அமைச்சர், ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தாவது முதலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர் பார்க்கிறார்கள்.

    எனவே, இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சரவை தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு, பல்லாண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin
    பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழர் தன்மான பேரவை சார்பில் நேற்று இரவு கருத் தரங்கம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில அரசியல் காரணங்களால் விடுதலை செய்யாமல் இருந்து வருகின்றனர். இதில் அரசை குறை கூட முடியாது. 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு, கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும்.

    மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்த பிறகு கவர்னர் ஏன் கையெழுத்திட மறுத்து வருகிறார் என்று தெரிய வில்லை. 7 பேரும் சட்டத்தை மதித்து கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×