வேலூர் மத்திய சிறையில் 3-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை. பழங்களை மட்டும் உட்கொண்டு வருகிறார்.
வேலூர் மத்திய சிறையில் 3-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
Published on

வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

ஆனால் முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரியும், தன் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும் ஜெயிலில் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். 3-வது நாளாக நேற்றும் ஜெயிலில் வழங்கப்படும் உணவை அவர் உண்ணவில்லை. ஆனால் பழங்களை மட்டும் உட்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். அவர் மவுன விரதமும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com