search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளங்கோவன்"

    • பாராளுமன்ற தேர்தலோடு பிரதமர் காணாமல் போய்விடுவார்
    • திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் கண்டிப்பாக தோற்பார்களோ அவர்களது பட்டியலை வேட்பாளர்கள் பட்டியலாக பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

    தமிழகத்திற்கு தொடர்ந்து பிரதமர் மோடி வந்து செல்வது, நமது ஊரின் சாம்பார் அதிகம் பிடிப்பதால் தான் என நினைக்கிறேன். திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. சுமூகமாக தான் நடக்கிறது. இரண்டொரு நாளில் எந்தெந்த தொகுதி போட்டியிடுகிறோம் என்று வெளியிடப்படும்.

    பிரதமர் மோடி இந்த தேர்தலுடன் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என சொல்கிறார். கண்டிப்பாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மோடியை எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். காணாமல் போய்விடுவார்.

    தமிழகத்தில் என் மண், என் மக்கள் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் கூறி வருகிறார். தமிழகமே அவர்களது சொந்த பூமி என்று நினைத்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பணத்தையோ, நிதியையோ, வரியையோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கு கொடுக்கலாம் என்றில்லாமல், அதனை அவர்கள் சுருட்டி கொண்டுள்ளார்கள்.

    விஜயதாரணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வெளியேறுவது, சில கெட்ட மற்றும் மோசமான சக்திகள் காங்கிரஸ் கட்சியினை தூய்மைப்படுத்த வெளியேறி உள்ளனர்.

    அவர்களுக்கு எங்களது நன்றி. தமிழகத்தில் கஞ்சாவை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்கிறது. அதில், தப்பு தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். இதில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் எத்தனை சமூக விரோதிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுத்தீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு பிறகு அதிகமான குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.
    • கொறடா விஜயதரணிக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கும்படி தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

    இது கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. கொறடா விஜயதரணிக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கும்படி தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

    இது தொடர்பாக இளங்கோவன் கூறும்போது, "அம்மையார் விஜயதரணியை நேரில் அழைக்காதது தவறுதான். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரை நிச்சயம் நேரில் சென்று அழைப்பேன் என்று கிண்டலாக கூறினார்.

    இதற்கு பதில் அளித்து விஜயதரணி கூறியதாவது:-

    பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து இருக்க வேண்டும். அதற்காக 'கொறடா' என்ற அடிப்படையில் என்னிடமாவது சொல்லியிருந்தால் நானாவது அனைவரையும் அழைத்து இருப்பேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. அது ஏன் என்று புரியவில்லை.

    இதை கேட்டால் மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு கிடைத்தால் நேரில் அழைப்பேன் என்கிறார். அப்படி ஒரு வாய்ப்பு இளங்கோவனுக்கு மீண்டும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    அவர் என்னை அம்மையார் என்று அழைத்துள்ளார். ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? கொறடா மீது பயம் தேவையில்லை. அந்த பதவி மீதான மரியாதை இருந்தால் போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈவிகேஎஸ் இளங்கோவன் 61,182 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 38, 834 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
    • அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 22,348 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

    மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் 7-வது சுற்று முடிவுகள் வெளியாகின. பிறகு 1 மணிமுதல் 1.45 மணிவரை உணவு இடைவேளைக்காக வாக்குகள் எண்ணுவது நிறுத்தப்பட்டது. அதன்பின்பு 8-வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது.

    அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 61,182 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 38, 834 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

    அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 22,348 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
    • பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் சந்தித்து விட்டார். ஆனால் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது.

    இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்ட கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் செய்யும் என்று தெரிவித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பொறுப்பாளராக நிர்வாக குழு உறுப்பினரான அருணாசலம் நியமிக்கப்பட்டு உள்ளார். இன்னும் 2 நாட்களில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பொறுப்பாளரான அருணாசலம் தலைமையின் கீழ் இந்த தேர்தல் பணிக்குழு செயல்படும்.

    இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசார வியூகங்களை பிரம்மாண்டமாக மேற்கொள்ள அருணாசலம் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.

    வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வே.ரா. சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை கமல் கட்சியின் ஓட்டுகள் ஈ.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைக்கும் என்பதால் அவர் கூடுதல் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். கலைஞர் இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். #mkstalin #elangovan #karunanidhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் துரை முருகனையும் வாழ்த்தினார்.

    பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக பாடுபட வேண்டும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். கலைஞர் இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார்.

    மின்னணு வாக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடத்தினால் எந்திரத்தை ரிமோட் மூலம் மோடி மோசடி செய்வார். இதில் மோடி வல்லவர். எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #elangovan #karunanidhi

    ×