search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private bus"

    • தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகைகார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர பஸ்கள் மட்டுமின்றி தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரி ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தனியார் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்பு மட்டுமின்றி இழப்பும் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன டாக்சியை அனுமதிப்பதால் ஆட்டோக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை. காப்பீடு செலுத்த முடியவில்லை. வாழ்க்கையை நடத்துவதே கடினமாகிவிட்டது. இதனால் 23 வெவ்வேறு வகையான தனியார் போக்குவரத்து வாகன சங்கங்கள் இணைந்து வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
    • அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து நின்றிருந்த வாகனங்களில் மீது மோதியது.

    பல்லடம்,ஜூலை.5-

    கோவையில் இருந்து திருப்பூர் வரை செல்லும் ராஜலட்சுமி என்ற தனியார் பஸ் நேற்று வழக்கம் போல கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர் செல்வதற்காக பல்லடம் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருப்பூரைச் சேர்ந்த உதயகுமார்(32) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக ரமேஷ் என்பவர்இருந்தார்.

    இந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள்,1அமரர் ஊர்தி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. புறச்சாலையில் செல்லும் அதே வேகத்தில் பல தனியார் பஸ்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் செல்கின்றன.

    இதற்கிடையே ஆம்புலன்ஸில் டிரைவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பஸ்ஸில் முன்புறம் அமர்ந்திருந்த பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இந்த விபத்தால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பஸ் நிலையமே போராட்ட களம் போல் காட்சியளித்தது.
    • தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து அவர்களை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று இரவு பழனியில் இருந்து பஸ்சை ஓட்டிக் கொண்டு தாராபுரம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர்.

    அதனை தங்களது செல்போனில் படம் பிடித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரையும் அந்த கும்பல் தாக்கியது. தட்டிக்கேட்ட தனியார் பஸ்சில் பயணித்த 2 பெண்கள் தள்ளு முள்ளுவில் சிக்கி காயம் அடைந்தனர். பஸ் நிலையமே போராட்ட களம் போல் காட்சியளித்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து அவர்களை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் தாராபுரம் வீராட்சிபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் செல்வராஜ் ( 44) என்பதும் , தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தனியார் பஸ் டிரைவர் பூபதிக்கும் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ்க்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பூபதியும், செல்வராஜூம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    அவர்கள் மீது தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் தனியார் பஸ் டிரைவர் பூபதி, ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனர்.

    அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி., கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரவு தாராபுரம் பஸ் நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது.
    • பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் ஷேக் கவுஸ் பாஷா பஸ்சிலிருந்து கீழே குதித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூருக்கு இன்று காலை வந்தது. திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பை கடந்து 5 முனை சந்திப்பு சாலை அருகே வந்தபோது பஸ்சில் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடையில் மோதியது. இதனால் கடையின் முன்பக்கம் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் பாஷா (வயது 60) என்பவர் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். செல்போன் கடையில் வேகமாக மோதிய பஸ் பின்னால் வந்ததுபோது ஷேக் பாஷா மீது மோதி கீழே விழுந்தார். இதில் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சேக் பாஷா இறந்தார். பஸ்மோதி நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.

    அதன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றும் மோதியது. ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி, சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் இறந்த ஷேக் கவுஸ் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் ஆட்டோ மற்றும் தனியார் பஸ் மோதி விபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது.

    கோவை:

    சில பல வருடங்களுக்கு முன்பு வரை கடைகள், ஓட்டல்கள், பெரிய அங்காடிகள் ஆகியவற்றிற்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

    வங்கி கணக்கு வைத்திருக்கும் பலரும், வங்கிகளுக்கு சென்றே பணம் எடுப்பதும், பணம் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நாகரீகம் வளர, வளர அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வங்கிகளில் பணம் போடுவது மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றை செய்து விடுகின்றனர்.

    அதுபோன்று தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது.

    கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர். அனைத்து கடைகளிலும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்களுக்கு சில்லரை மீதி கொடுப்பது போன்ற பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.

    இதுவரை கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது. அப்படி கொடுப்பவர்களுக்கு, சில கண்டக்டர்கள் மீதி சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலர் சரியான சில்லறை எடுத்து வர வேண்டியதானே என கடிந்து கொள்வதும் உண்டு. கடிந்து கொண்டாலும் சில்லறையை கொடுத்து விடுவார்கள்.

    இதனால் அனைத்து பஸ்களிலும் சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருக்கும். இதன் காரணமாக பல நேரங்களில் பெரிய அளவிலான தகராறுகள் கூட ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    அதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணும் விதமாக கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பஸ்களை இயக்கி வருகிறது.

    இந்த 5 பஸ்களிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

    3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

    இதுகுறித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளரான கார்த்திக் பாபு கூறியதாவது:-

    பஸ்களில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பஸ்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

    உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பஸ்களிலும் ஒட்டினோம்.

    இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது.

    மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் முதல் முறையாக தனியார் டவுன் பஸ்சில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், இதுபோன்ற மற்ற பஸ்களிலும் செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி பயணி பலியானார்.
    • தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே 42 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்ேபாது அந்த வழியாக வந்த தனியார் பஸ் கவனக்குறைவாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தர். உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் டேனியல் ஜேசுதாஸ்(47) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது. இதையடுத்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார். மேலும், அதில் வந்த பயணிகள் வேறு பஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

    • முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.
    • புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம் , சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    கடலூர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் புதுவையில் இருந்து கடலூருக்கு பஸ்கள் இயக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன்படி புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதுவை-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.

    ஆட்டோவில் செல்ல முடியாதவர்கள் நடந்தே கடலூருக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது.

    மேலும் புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    • 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
    • உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலும் 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான பஸ்களை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

    "உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பஸ்களும் 2025-ம் ஆண்டில் 500 பஸ்களும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

    'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்களை தனியார் வழங்கவும், டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    சென்னையில் பஸ்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யவும் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் வழி வகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் ஆலோசனை குழு அமைக்க டெண்டர் விடப்படுகிறது. இக்குழு இத்திட்டத்தில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.

    • தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
    • பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.

    வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.

    ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.

    • கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
    • டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி கொண்டு இருந்தார். பஸ்சில் 6 பயணிகளும் இருந்தனர்.அப்போது, காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

    அப்போது, இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் கூறினார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் மீது இளைஞர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

    மேலும், டிரைவர் மனோஜ்குமார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த காரமடை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொண்டேபாளையத்தை சேர்ந்த ரகுராம்(21), கவுதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர் தான் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அன்னூர் அருகே தனியார் பஸ் ஊழியர்கள் சில்லறைக்காக பயணி ஒருவரை தாக்கிய சம்பவம் பஸ் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.

    அப்போது டிக்கெட் வாங்கும்போது ரங்கசாமி, கண்டக்டரிடம் சரியான சில்லறை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும், ரங்கசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதனை பார்த்த பஸ் டிரைவர் சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பஸ் நிறுத்தினார். பின்னர் கண்டக்டருடன் சேர்ந்து ரங்கசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதனால் ரங்கசாமி பஸ்சில் இருந்து இறங்கினார். கீழே இறங்கிய ரங்கசாமியை விடாமல் இருவரும் சரமாரியாக தாக்கினர். இதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே டிரைவர்கள் பஸ்சை அதிவேகமாக இயக்கி வருவதாகவும், பாதுகாப்பின்றி படியில் தொங்கி கொண்டு செல்லும் அளவுக்கு, கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த வருகிறது. இந்த நிலையில், தனியார் பஸ் ஊழியர்கள் சில்லறைக்காக பயணி ஒருவரை தாக்கிய சம்பவம் பஸ் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ×