search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுத்தாவணி"

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.
    • ஆம்னி பஸ் நிலையமும் சீரமைக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மட்டுமல்லாது தென் தமிழகத்தின் முக்கிய பஸ் நிலையமாகவும், சந்திப்பு மையமாகவும் மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், 3 இடங்களில் செயல்பட்டு வந்த பேருந்து முனையங்களுக்கு மாற்றாக மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுரை மாநராட்சி சார்பில் ரூ.10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் பரப்பில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 1999-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது ஐஎஸ்ஓ 9001:2000 தரச் சான்று பெற்ற பஸ் நிலையமாகும்.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது எட்டு பகுதிகளாக இந்த பஸ் நிலையம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தடத்தில் சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கான பஸ்களும், 2-வது தடத்தில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர், 3-வது தடத்தில் சிவகங்கை, தோண்டி, கொட்டைபட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கர்நாடக பஸ்களும், 4-வது தடத்தில் காரைக்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, தேவகோட்டை, மேலூர், அறந்தாங்கி, பட்டுகோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புணரி பஸ்களும், 5-வது தடத்தில் ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, கீழக்கரை பஸ்களும், 6-வது தடத்தில் ராசபாளையம், தென்காசி, செங்கோட்டை, ஸ்ரீவில்லி புத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடைய நல்லூர் பஸ்களும், 7-வது தடத்தில் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம் பஸ்களும், 8-வது தடத்தில் திருநெல் வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, களியக்காவிளை, வள்ளியூர் மற்றும் கேரள மாநில பஸ்களும் இயக்கப்படு கின்றன.

    போலீஸ் அவுட் போஸ்ட், தாய்மார்கள் ஓய்வறை, டிக்கெட் முன்பதிவு மையங்களும் இங்கு உள்ளது.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதையடுத்து ஆம்னி பஸ்களுக்கென 2014-ம் ஆண்டு தனி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, மங்களூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் தற்போதைய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நிலையில் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு சேத மைடந்து அடிக்கடி உதிர தொடங்கியது. இதனால் பயணிகளுக்கும், வியாபாரி களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தாய்மார்கள் ஓய்வறை பராமரிப்பின்றி இருந்ததால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க தொடங்கினர்.

    மேலும் கழிவறைகள் பழுதடைந்து காணப்பட்டன.இதையடுத்து பஸ் நிலையத்தை முழுமையாக புனரமைப்பு செய்ய திட்ட மிடப்பட்டது. பயணி களுக்கான இருக்கைகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, கழிவறை, வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் புதுப்பிப்பு, ஆம்னி பஸ் நிலையம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி ெதாடங்கி உள்ளது. டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர்.

    சேதமடைந்த மேற்கூரை கள், பைப் லைன்கள், மின் இணைப்புகளை முழுமை யாக புனரமைப்பு செய்ய வும், காத்திருப்போர் மற்றும் பயணிகள் அமருவதற்கான வசதிகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், தாய்மார் கள் பாலூட்டும் அறையை முழுமையாக புதுப்பிக்கவும், பஸ் நிலையத்திற்குள்ள ரோடுகளை செப்பனிட்டு சீரமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி பயணி பலியானார்.
    • தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே 42 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்ேபாது அந்த வழியாக வந்த தனியார் பஸ் கவனக்குறைவாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தர். உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் டேனியல் ஜேசுதாஸ்(47) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×