search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polling station"

    • தஞ்சை மாவட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர் களாலும் தாசில்தார் அலுவலகங்களிலும் படிவம் 6பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதே போல் அடுத்த மாதம் 5-ந் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாட்களில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இவற்றின் மூலம் தங்களை செல்போன் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும்.
    • வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் டிசம்பர் 19 பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது, வாக்குச் சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டியது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல். ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
    • 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுைர தெற்கு மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அவைத்தலை வர் நாகராஜன், துணை செயலாளர் லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் தனபாண்டி, கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்குச்சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது.
    • ஒன்றிய பகுதிகளில் உயிர் நீத்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மேலவெளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

    தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நவம்பர் மாதம் 27-ம் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிளை கழகங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது, ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்கு சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக ஒன்றிய பகுதிகளில் உயிர் நீர்த்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது .

    இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மல்லிகா உத்திராபதி, ராமநாதன், பால துரையரசன், கோவி. ராஜேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மோகன், ஸ்டாலின் ராஜன், செல்வ கலைமணி, ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.

    • தஞ்சை மாநகரில் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது.
    • முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மத்திய மாவட்ட மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மீண்டும் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கும் மற்றும் உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

    நவம்பர் 27-ந் தேதி உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் நிர்வாகிகளை கொண்டு முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது, உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்படி இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்து தஞ்சை மாநகரம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஜித்து, மாநில பிரசார குழு உறுப்பினர் கார்குழலி, முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், மாநகர நிர்வாகிகள் துணை செயலாளர்கள் எழில், உஷா, காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் சந்திரசேகர மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கமலாரவி, செந்தமிழ்செல்வன், மண்டல குழு தலைவர்கள் ரம்யாசரவணன், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்மாநகர துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
    • 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் பழுதடைந்த ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரைவு ஓட்டுச்சாவடிகள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.

    மடத்துக்குளம் தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் மாற்றம் இல்லை. உடுமலை தொகுதியில் 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசியல் கட்சியினர் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.
    • விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது.

    விருதுநகர்

    மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி விருதுநகர் யூனியனுக்கு உட்பட்ட அழகாபுரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 713 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் அழகுத்தாய் 557 வாக்குகளும், முனீஸ்வரி 127 வாக்குகளும் பெற்றனர். 29 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 430 வாக்குகள் வித்தியாசத்தில் அழகுத்தாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதேபோல் வலையப்பட்டி பஞ்சாயத்து தேர்த லில் 729 வாக்குகள் பதிவாகின. இதில் மீனாட்சி 410 வாக்குகளும், முத்து ப்பாண்டி 310 வாக்குகளும் பெற்றனர். 9 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 100 வாக்குகள் வித்தியாசத்தில் மீனாட்சி வெற்றி பெற்றார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்து 3-வது வார்டு இடைத்தேர்தலில் 129 வாக்குகள் பதிவாகின. இதில் சுரேஷ்குமார் 68 வழக்குகளும், பிருத்யூமன் 51 வாக்குகளும் பெற்ற னர். 10 வாக்குகள் செல்லாத வையாக அறிவிக்கப்பட்டது. 17 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கர நாராயணன் அறிவித்தார். டி.எஸ்.பி. சரோஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இதில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



    மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு பிரசாரம் செய்த மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Dayanidhimaran
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 10 மணிக்கு ஓட்டு போட்டார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆட்சி மாற்றத்திற்காக தான் வாக்களித்ததாகவும், அதேபோல் மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Dayanidhimaran
    அருணாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. அங்கு அதிகாரிகள் நடந்து செல்ல ஒரு நாள் ஆகும்.
    இடாநகர்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாசல பிரதேசம். இங்கு ஏப்ரல் 11-ந் தேதி சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அருணாசல பிரதேசத்தில் அன்ஜா மாவட்டத்துக்கு உட்பட்டது ஹைலியாங் சட்டமன்ற தொகுதி. ஹைலியாங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் மாலோகம் என்ற மலைக்கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் சோகிலா (வயது 39), அவருடைய கணவர் ஜனலூம் தயாங் ஆகியோர் குழந்தையுடன் வசித்து வருகிறார்கள். இங்கு மேலும் சில குடும்பங் களும் வசித்து வருகின்றன.

    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாலோகம் வாக்குச்சாவடியில் சோகிலா மற்றும் அவருடைய கணவர் ஆகியோருக்கு மட்டுமே ஓட்டுகள் இருந்தன. அந்த கிராமத்தை சேர்ந்த மற்ற வாக்காளர்களுக்கு வேறு வாக்குச்சாவடியில் ஓட்டுகள் இருந்தன.

    தற்போது சோகிலா கணவரும் சில காரணங்களுக்காக ஹைலியாங் தொகுதிக்கு உட்பட்ட வேறு வாக்குச்சாவடிக்கு தனது பெயரை மாற்றி விட்டார். இதனால் சோகிலாவின் ஓட்டுக்காக மட்டும் இங்கு தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.

    ஹைலியாங் நகரில் இருந்து மாலோகம் வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் நடந்து செல்ல ஒரு நாள் ஆகும் என்று முதன்மை தேர்தல் அதிகாரி கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “தேர்தல் நடைபெறும் நாளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி செயல்படும். அவர் வாக்களிக்க எப்போது வருவார் என்று எங்களுக்கு தெரியாது. யாரையும் நாங்கள் விரைவாக வந்து வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது” என்றார்.

    பக்கேஹெசாங் தொகுதிக்கு உட்பட்ட லாம்டா வாக்குச்சாவடியில் வெறும் 6 வாக்காளர்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 7 வாக்குச்சாவடிகளில் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 
    ×