search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் முடிவு விவரம்
    X

    நல்லமரம் பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார். 

    உள்ளாட்சி தேர்தல் முடிவு விவரம்

    • மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.
    • விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது.

    விருதுநகர்

    மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி விருதுநகர் யூனியனுக்கு உட்பட்ட அழகாபுரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 713 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் அழகுத்தாய் 557 வாக்குகளும், முனீஸ்வரி 127 வாக்குகளும் பெற்றனர். 29 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 430 வாக்குகள் வித்தியாசத்தில் அழகுத்தாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதேபோல் வலையப்பட்டி பஞ்சாயத்து தேர்த லில் 729 வாக்குகள் பதிவாகின. இதில் மீனாட்சி 410 வாக்குகளும், முத்து ப்பாண்டி 310 வாக்குகளும் பெற்றனர். 9 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 100 வாக்குகள் வித்தியாசத்தில் மீனாட்சி வெற்றி பெற்றார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்து 3-வது வார்டு இடைத்தேர்தலில் 129 வாக்குகள் பதிவாகின. இதில் சுரேஷ்குமார் 68 வழக்குகளும், பிருத்யூமன் 51 வாக்குகளும் பெற்ற னர். 10 வாக்குகள் செல்லாத வையாக அறிவிக்கப்பட்டது. 17 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கர நாராயணன் அறிவித்தார். டி.எஸ்.பி. சரோஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×