தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

மதுைர தெற்கு மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருமங்கலம்

திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அவைத்தலை வர் நாகராஜன், துணை செயலாளர் லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் தனபாண்டி, கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com