என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர, ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்
    X

    செயல்வீரர்கள் கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர, ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும்.
    • வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் டிசம்பர் 19 பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது, வாக்குச் சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டியது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல். ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×