search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்துக்கேட்பு கூட்டம்"

    • விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது
    • நாகுடியில் நீர்வளத்துறை சார்பில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் நீர்வளத்துறை சார்பில் விவசாயிகளுடனான கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு சார்பில் கல்லணைக்கால்வாயை விரிவாக்கம் செய்தல், புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அக்கினி ஆற்றிலிருந்து மும்பாலை வரையிலான 2ம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்குதல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு கல்லணை க்கால்வாய்கடைமடை பகுதி விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இதற்காக நீர்வளத்துறை சார்பில் நாகுடியில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர். மேலும் தங்கள் பகுதி ஏரி கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும், சறுக்கைகள் மற்றும் மடைகளை பழுதுபார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

    அப்போது கூட்டத்தில் தலைமை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்து விவசாயிகளின் கருத்து மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளித்தனர். கல்லணை முதல் கடைமடை மும்பாலை வரை மொத்தமுள்ள 239 கிலோ மீட்டர் தூரம் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றால் அப்பகுதியில் உள்ள 694 ஏரி, கண்மாய்கள் நிரப்பப்பட்டு சுமார் 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர் விளை நிலங்கள் நல்ல முறையில் நீர் பாசன வசதி பெற்று செழிப்படையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் பாண்டியன், திலீபன், உதவிப் செயற்ப்பொறியாளர் சண்முகம், புஷ்பராணி, செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், பிரசன்னா, கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், நிர்வாகிகள் பொன்கணேசன், பிஎம் பெரியசாமி, கல்யாணசுந்தரம், வீரப்பன், ராமசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
    • 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் பழுதடைந்த ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரைவு ஓட்டுச்சாவடிகள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.

    மடத்துக்குளம் தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் மாற்றம் இல்லை. உடுமலை தொகுதியில் 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசியல் கட்சியினர் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • தேனி மாவட்டத்தில் சார்பதிவாளர் எல்லைகளை மறுசீரமைத்தல் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
    • எல்லை மறுசீரமைப்பு குறித்து கருத்து கேட்பு

    தேனி :

    தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 2021-2022 நிதி ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது பதிவுத்துறையில் வருவாய் மாவட்டத்துடன் பொருந்தும் வகையில் முக்கிய வருவாய் கிரா மத்துடன் அவற்றின் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமம் இணைத்து ஒரே சார்பதிவகத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் வகையில் சார்பதிவக பதிவு எல்லைகள் சீரமை க்கப்பட வேண்டும்.

    சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது ஒரு சார்பதிவாளர் அலுவல கத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறொரு சார்பதிவாளர் அலுவலகத்தி லும் அமைந்துள்ளதால் தானியங்கி பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை – வருவாய்த்துறை ஒருங்கி ணைந்த செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளதை களையும் நோக்கத்தோடு ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகிலுள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

    தேனி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பெரியகுளம் பதிவு மாவட்டத்தில் குறிப்பிட்ட வருவாய் கிராமத்துடன் உத்தேசமாக இணைக்கப்பட வேண்டிய வருவாய் கிராமம் பட்டியல் துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிவிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் தேனி சிவராம் நகர், ஸ்ரீ பெத்தனாட்சி மஹாலில், கலெக்டர் தலைமையில் 30ந் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

    எனவே தொடர்புடைய கிராம பொதுமக்கள் அனைவரும் நடை பெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×