search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்
    X

    விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்

    • விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது
    • நாகுடியில் நீர்வளத்துறை சார்பில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் நீர்வளத்துறை சார்பில் விவசாயிகளுடனான கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு சார்பில் கல்லணைக்கால்வாயை விரிவாக்கம் செய்தல், புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அக்கினி ஆற்றிலிருந்து மும்பாலை வரையிலான 2ம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்குதல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு கல்லணை க்கால்வாய்கடைமடை பகுதி விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இதற்காக நீர்வளத்துறை சார்பில் நாகுடியில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர். மேலும் தங்கள் பகுதி ஏரி கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும், சறுக்கைகள் மற்றும் மடைகளை பழுதுபார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

    அப்போது கூட்டத்தில் தலைமை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்து விவசாயிகளின் கருத்து மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளித்தனர். கல்லணை முதல் கடைமடை மும்பாலை வரை மொத்தமுள்ள 239 கிலோ மீட்டர் தூரம் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றால் அப்பகுதியில் உள்ள 694 ஏரி, கண்மாய்கள் நிரப்பப்பட்டு சுமார் 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர் விளை நிலங்கள் நல்ல முறையில் நீர் பாசன வசதி பெற்று செழிப்படையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் பாண்டியன், திலீபன், உதவிப் செயற்ப்பொறியாளர் சண்முகம், புஷ்பராணி, செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், பிரசன்னா, கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், நிர்வாகிகள் பொன்கணேசன், பிஎம் பெரியசாமி, கல்யாணசுந்தரம், வீரப்பன், ராமசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×