search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்ட  சார்பதிவக எல்லைகளை மறுசீரமைத்தல் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்
    X

    தேனி மாவட்ட சார்பதிவக எல்லைகளை மறுசீரமைத்தல் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்

    • தேனி மாவட்டத்தில் சார்பதிவாளர் எல்லைகளை மறுசீரமைத்தல் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
    • எல்லை மறுசீரமைப்பு குறித்து கருத்து கேட்பு

    தேனி :

    தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 2021-2022 நிதி ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது பதிவுத்துறையில் வருவாய் மாவட்டத்துடன் பொருந்தும் வகையில் முக்கிய வருவாய் கிரா மத்துடன் அவற்றின் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமம் இணைத்து ஒரே சார்பதிவகத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் வகையில் சார்பதிவக பதிவு எல்லைகள் சீரமை க்கப்பட வேண்டும்.

    சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது ஒரு சார்பதிவாளர் அலுவல கத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறொரு சார்பதிவாளர் அலுவலகத்தி லும் அமைந்துள்ளதால் தானியங்கி பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை – வருவாய்த்துறை ஒருங்கி ணைந்த செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளதை களையும் நோக்கத்தோடு ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகிலுள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

    தேனி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பெரியகுளம் பதிவு மாவட்டத்தில் குறிப்பிட்ட வருவாய் கிராமத்துடன் உத்தேசமாக இணைக்கப்பட வேண்டிய வருவாய் கிராமம் பட்டியல் துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிவிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் தேனி சிவராம் நகர், ஸ்ரீ பெத்தனாட்சி மஹாலில், கலெக்டர் தலைமையில் 30ந் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

    எனவே தொடர்புடைய கிராம பொதுமக்கள் அனைவரும் நடை பெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×