search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகவர்கள்"

    • கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது.
    • வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது


    நாகர்கோவில் : கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் மரியசிசு குமார் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் குறும்பனை முதல் ராமன் துறை வரையிலான பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது. அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பூத் முகவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பது என்றும், வரும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜீன், பெதலிஸ், லயோலியன், ஜோசப் பாத், சீலன், லீலா, ஆண்டனி, பெர்சிலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சி- திருவண்ணா மலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலை சந்திக்க தொகுதியில் உள்ள பாக முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பணியில் பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.  நாம் முதல்-அமைச்சர் செய்துள்ள அனைத்து திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தால் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியினர் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ் செல்வன், மாசிலாமணி, மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் அமுதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராம. சரவணன், மாவட்ட மகளிர் .அணி திலகவதி, மாவட்ட மாணவர் அணி பிரசன்னா, அனைத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • மேயர் மகேஷ் ஆலோசனை வழங்கினார்
    • செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மண்டைக்காடு பருத்திவிளை ஆர்க் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி தலைமை கழக பார்வை யாளர் உசிலம்பட்டி அருண் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் வரவேற்றார்.

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயசீலன், செல்வதாஸ், டாக்டர் ஜாண் சந்திரசேகர், குளச்சல் சபீன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்ட னர். ஒன்றிய பிரதிநிதி பால்டுவின் மேஷாக் நன்றி கூறினார்.

    வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் குருந்தன் கோடு மேற்கு ஒன்றிய 103 வாக்குச்சாவடி முகவர்க ளும் கலந்து சிறப்பிப்பது. தி.மு.க. தேர்தல் அறிக்கை படி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம்.

    சென்னை:

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயர்வாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    ஆவின் பால் விற்பனை மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என்ற மூன்று அடுக்குகளை கொண்டது. மாவட்டத்துக்கு மாவட்டம் சில்லரை விற்பனை, விலை, கமிஷன் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆவின் 500 மில்லி நைஸ் நீல பாக்கெட் ரூ.20, பச்சை ரூ.22, ஆரஞ்சு ரூ.30 என்று அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதை மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.1 குறைத்து வழங்குகிறார்கள். இது தவிர போக்குவரத்து மானியமாக லிட்டருக்கு 70 காசுகளும் வழங்கப்படுகிறது.

    இதில் மொத்த விற்பனையாளர்கள் தங்கள் லாப பங்காக 50 காசுகளை எடுத்து கொண்டு பால் முகவர்களுக்கு 50 காசு குறைவாக சப்ளை செய்கிறார்கள். பால் முகவர்கள் லீக்கேஜ் போன்ற இழப்புகளையும் தாங்கி சில்லரை கடைகளுக்கு அதிகாலை 4 மணி முதல் வழங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் 50 காசு கூடுதலாக விற்கிறார்கள். கடைக்காரர்கள் கூடுதலாக 50 காசு வைத்து விற்கிறார்கள். இப்படித் தான் லிட்டருக்கு ரூ. 2 வரை கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.

    இதை சரிகட்ட மொத்த விற்பனையாளர்கள் என்ற இடைத்தரகர் இல்லாமல் முகவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். விற்பனைக்கான கமிஷன் தொகையை சதவீத அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அது வரை இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா முகவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஹோம் ஸ்டே நிறுவனங்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள், முகாம் ஆபரேட்டர்கள், கேரவன் டூர்- பார்க் ஆபரேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

    அவர்கள் www.tntourismtors.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை மேல வெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலகம் மற்றும் தொலைபேசி எண்: 0452-2334757 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • மதுைர தெற்கு மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அவைத்தலை வர் நாகராஜன், துணை செயலாளர் லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் தனபாண்டி, கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை மாநகரில் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது.
    • முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மத்திய மாவட்ட மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மீண்டும் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கும் மற்றும் உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

    நவம்பர் 27-ந் தேதி உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் நிர்வாகிகளை கொண்டு முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது, உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்படி இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்து தஞ்சை மாநகரம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஜித்து, மாநில பிரசார குழு உறுப்பினர் கார்குழலி, முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், மாநகர நிர்வாகிகள் துணை செயலாளர்கள் எழில், உஷா, காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் சந்திரசேகர மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கமலாரவி, செந்தமிழ்செல்வன், மண்டல குழு தலைவர்கள் ரம்யாசரவணன், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்மாநகர துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • விழாவில் தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார்.
    • எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிகாய்) நெல்லை 4வது கோட்ட மாநாடு நடந்தது.

    தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார். மாநாடுவரவேற்பு குழு மாரியப்பன் வரவேற்றார். சங்கரன்கோவில் கிளை செயலாளர் கணேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். லிகாய் மாநில தலைவர் பூவலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். எல்.ஐ.சி.முதுநிலை கோட்ட மேலாளர் குமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலைக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், லிகாய் கோட்ட தலைவர் நடராஜன் லிகாய் மாநில செயலாளர் ராஜேஷ், மாநில பொருளாளர் தாமோதரன், முன்னாள் கோட்ட தலைவர் அல்அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நெல்லை கோட்ட பொதுசெயலாளர் குழந்தைவேலு வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கை வாசித்தார். நெல்லை கோட்ட பொருளாளர் கென்னடி வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுசெயலாளர் கலாம் நிறைவுரை ஆற்றினார். லிகாய் தென்காசி செயலாளர் கனகராஜ் நன்றிகூறினார்.

    கூட்டத்தில் எல்.ஐ.சி. பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர்களுக்கான குழு காப்பீடு வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும். கேரளா போல் எல்.ஐ.சி. முகவர்களுக்க நலவாரியம் அமைத்திட வேண்டும். எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×